தற்போதுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக, நாளை வெள்ளிக்கிழமை (28) பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்தாமல் இருப்பதற்கும், நாளைய தினம் காலை 9.00 மணி முதல் காலை 9.30 மணி வரை மாத்திரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2025 ஒக்டோபர் 24 ஆம் திகதிய 2459/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.
அத்துடன், நாளை மறுதினம் (29) பாராளுமன்றம் கூட்டாமல் இருப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில், அதாவது திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் இரவு 12.00 மணி வரை வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM