நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை : பாதிப்பு குறித்து தற்போது வரையான நிலைவரம் !

Published By: P. Saranya

27 Nov, 2025 | 11:21 AM
image

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (26) முதல் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடர்கின்றது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், இதுவரை 170 மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 26 பேர் வரை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தற்போதைய அறிக்கையின்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • பாதிப்படைந்த மாவட்டங்கள் : 17
  • பாதிப்படைந்த பிரதேச செயலகப் பிரிவுகள் : 79
  • பாதிப்படைந்த குடும்பங்கள் : 1,158
  • பாதிப்படைந்த நபர்கள் : 4,008

குறிப்பாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக,

  •  உயிரிழப்புகள் : 18 (அனைத்தும் பதுளையில்)
  •  காயமடைந்தோர் : 10
  • காணாமல் போனோர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

சீரற்ற வானிலை காரணமாக வீடுகளும் பெருமளவு சேதமடைந்துள்ளன:

  • முழுமையாக சேதமடைந்த வீடுகள் : 3
  • பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் : 381

பெரும்பாலான குடும்பங்கள் தற்காலிக பாதுகாப்பு முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்:

  • பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளோர் : 131
  • உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளோர் : 472

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வானிலை மேலும் மோசமடையும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29
news-image

நேபாள வெள்ளப்பெருக்கு : மீட்புப் பணிகளுக்காக...

2026-09-09 18:18:38
news-image

தென்னேகும்புறையில் கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு...

2026-09-09 19:45:33
news-image

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின்...

2026-09-09 17:44:50
news-image

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் புதிய சீனத் தூதுவருக்கும்...

2026-09-09 17:44:10