பதுளை - கந்தேகெதர - கெடவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீடொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் மூடப்பட்டுள்ளதாக, புதன்கிழமை (26) காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வீட்டை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹாலிஎல - கெடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், அவரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன். சந்தேக நபர்களைக் கைது செய்ய கந்தேகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM