(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தி மூலம் 2030 ஆண்டாகும்போது 15 பில்லியன் ரூபாவை ஈட்டிக்கொள்ளும் இலக்கை நோக்கியே நாங்கள் பயணிக்கிறோம். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அத்துடன் அடுத்த வருடம் மூன்றாம் காலாண்டில் முதலாவது டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க எதிர்பார்க்கிறோம் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு,விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கையர்கள் தங்களுக்கு தேவையான இறப்பு, பிறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை தங்களின் உறவினர்கள் ஊடாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சென்று, பல மணிநேரம் காத்திருந்து பெற்றுக்காெள்ளும் நிலையே இருந்து வந்தது. தற்போது அந்த பிரச்சினை எதுவும் இல்லை. அந்த நடவடிக்கைகள் தற்போது டிஜிட்டல் பயப்படுத்தி இருக்கிறோம். அதனால் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் எந்தவேளையிலும் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்பிரகாரம் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வகையில், மாதத்துக்கு ஆயிரம் முதல் ஆயிரத்தி 500 வரை விநியோகித்து வருகிறோம். இதன்மூலம் பதிவாளர் நாயகம் திணைக்களம் சுமார் 15ஆயிரம் டொலர்களை ஈட்டிக்கொள்கிறது.
அதேபோன்று ஜனாதிபதி நிதியமும் டிஜிட்டல் மயமாக்கி இருக்கிறோம். இதன் காரணமாக தூர இடங்களில் இருப்பவர்கள், ஜனாதிபதி நிதியத்தி்ன் உதவிகளைப்பெற காெழும்புக்கு வரவேண்டியதில்லை. அவர்களின் விண்ணப்ப படிவங்களை அவர்களுக்கு அருகில் இருக்கும் பிரதேச செயலகத்தில் வழங்குவதற்கும் அதன் நிலைமை தொடர்பில் பரிசோதனை செய்வதற்கு முடியுமான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இதன் மூலம் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை இலகுவில் பெற்றுக்கொடுப்பதற்கே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மேலும் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்காக பெளதிக நிறுவனங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த நிறுவனங்களுக்கு எமது அமைச்சின் ஒதுக்கீடுகளில் இருந்து இதுவரை 300 மில்லியன் ரூபா வழங்கி இருக்கிறோம் மேலும் 1700 மில்லியன் ரூபா வழங்க இருக்கிறோம்.இந்த நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை செயல்திரனாக மேற்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
மேலும் ஆள்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை ஒன்றை நாங்கள் குருணாகல் மாவட்டத்தில் ஆரம்பித்திருக்கிறோம். இதன் மூலம் வடமேல் மற்றும் வடமத்திய மாகாண மக்கள் கொழும்புக்கு வராமல் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ள வசதி செய்திருக்கிறோம்.
இது நாங்கள் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்த இருக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு மத்திய நிலையமாகும்.அடையாள அட்டை கார்ட்க்கு பதிலாக டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த வேலைத்திட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் பிரகாரம் அடுத்த வருடம் மூன்றாம் காலாண்டில் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கிறோம்.
அத்துடன் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தி மூலம் 2030 ஆண்டாகும்போது 15 பில்லியன் ரூபாவை ஈட்டிக்கொள்ளும் இலக்கை நோக்கியே நாங்கள் பயணிக்கிறோம். அந்த இலக்கை அடைந்துகொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM