மீன்பிடி கைத்தொழிலை பாதுகாக்காவிடின் மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவே பாதிக்கப்படுவர் - நாமல்

26 Nov, 2025 | 06:15 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் 18 வீதமானவர்கள் மீன்பிடித் துறையில் இருக்கின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எமது ஆட்சியில்  விசேட திட்டங்களை அமுல்படுத்தினோம். ஆனால், இப்போது மீன்பிடித்துறை வீழ்ச்சியடைந்து வருகிறது.  இறக்குமதி செய்வது இலாபம் என்று அரசாங்கம் நினைக்கிறது. மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாக்காவிடின்  நாட்டு மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே பாதிப்பு   ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26)  நடைபெற்ற 2026 வரவு - செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும்  விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார  அமைச்சுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது

2026  ஆம் ஆண்டுக்கான   வரவு-  செலவுத் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும்  ஆளும் ப்பின  கூறினர். ஆனால் ஒதுக்கப்பட்ட நிதியில் வேலை செய்கின்றனரா என்று தெரியவில்லை. கீழ் மட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியில் எந்தளவுக்கு நடக்கின்றது என்பது சிக்கலானது. கடந்த முறை ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு தொகை நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்காக செலவிடப்பட்டது என்று நாங்கள் கேட்கின்றோம்.

நாங்களுக்கும் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். ஆட்சி மாற்றம் நடந்தது. அதன்பின்னர் நீங்கள் அதனை தொடர்கின்றீர்கள். ஆனால் அது நடக்கின்றதா என்று தெரியவில்லை. தொலைபேசி கோபுரங்களை கூட அமைக்க முடியாத நிலையில் இருக்கின்றீர்கள்.

இதேவேளை கடற்றொழில் மற்றும் மீன்பிடி விடயத்தில் உலகமே நன்னீர் மீன் பண்ணை முறைக்கு மாறி வருகின்றது. இது தொழில்நுட்பத்துடன் இணைந்த விடயமாகும். இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவில் 200 மில்லியன் ரூபா இரால் பண்ணைக்காக ஒதுக்கப்பட்டது. அதில் எவ்வளவு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. நாம் அறிந்த வகையில் அந்த நிதி அவ்வாறே இருக்கின்றது.

அத்துடன் இந்த ஜனாதிபதி வந்த பின்னர் கருவாடு இறக்குமதி 461 மெற்றிக்தொன்னால் அதிகரித்துள்ளது. மாசி இறக்குமதி 383 மெற்றிக்தொன்னால் அதிகரித்துள்ளது. அதேவேளை ஏற்றுமதியை எடுத்துக்கொண்டால் இந்த கடலை கொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம் என்று கூறியே ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் இரால் ஏற்றுமதி 427 மெற்றிக்தொன் கடந்த வருடத்தை விடவும் குறைவாக உள்ளது. அத்துடன் நண்டு ஏற்றுமதி 1133 மெற்றிக்தொன்னால் குறைவடைந்துள்ளது. குறிப்பாக கடல் வளத்தின் மூலம் கிடைக்க வேண்டிய வருமானத்தில் 800 கோடி ரூபா குறைவடைந்துள்ளது.

இந்த நாட்டில் 18 வீதமானவர்கள் மீன்பிடி துறையில் இருக்கின்றனர். நாங்கள் மீனவர்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். அவர்களுக்கு நிவாரணங்கள், வீட்டுத் திட்டங்கள், பிள்ளைகளுக்கான கல்வி திட்டங்கள் என்பனவற்றை வழங்கினோம்.

ஆனால் இப்போது மீன்பிடிதுறை வீழ்ச்சியடைந்து வருகின்றது. தெளிவாக இதுபோன்ற துறைகளை பாதுகாக்கும் நோக்கம் உங்களுக்கு கிடையாது. இறக்குமதி செய்வது லாபம் என்று நினைக்கின்றீர்கள். இந்த தொழிலை பாதுகாக்க உங்களுக்கு எண்ணம் இல்லையென்றால் இந்த நாட்டு மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே பாதிப்பை ஏற்படுத்தும்

இந்த பாராளுமன்றத்தில் பேசக்கூடிய 159 பேர் இருந்தாலும் வேலைச் செய்யக்கூடியவர்கள் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. கடந்த வரவு செலவுத் திட்ட நிதியையே நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், இந்தமுறை ஜனாதிபதியினால் நான்கு மணித்தியாலங்களாக வாசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமும் அவ்வாறே அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48