எம்மில் பலருக்கு திடீரென்று இரவு நேரத்தில் பார்வையில் தடுமாற்றம் ஏற்படக்கூடும். சிலருக்கு கண் சோர்வு அல்லது தெரியும் பிம்பங்கள் சிதைவுற்றோ அல்லது தெளிவற்ற நிலையில் தெரிய கூடும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் ஒஸ்டிஜிமாடிசம் எனும் பார்வைத் திறன் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக அவதானிக்கலாம். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன வகையினதான லேசர் சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்மில் பெரும்பாலானவர்களுக்கு கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய பார்வை திறன் குறைபாட்டை பற்றி அறிந்திருப்போம் ஆனால் வெகு சிலர் மட்டுமே ஒஸ்டிஜிமாடிசம் எனும் பார்வை திறன் குறைபாட்டை பற்றி அறிந்து வைத்திருப்பார்கள். இது எம்முடைய கண்களில் உள்ள கார்னியா அல்லது லென்ஸின் சீரற்ற அமைவின் காரணமாக ஏற்படுகிறது. இதன் காரணத்தினால் மங்கலான பார்வை ஏற்பட்டு பார்வைத்திறன் குறைபாடு உண்டாகிறது.
எம்முடைய கண்கள் கோள வடிவத்தை கொண்டது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் சிலருக்கு இந்த அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, ஓவல் வடிவத்தில் அவர்களுடைய கருவிழி அமைந்திருக்கும். இதன் காரணமாக ஒளி ஒரே இடத்தில் ஊடுருவி குவிக்காமல் சிதைந்த வடிவில் ஊடுருவதால் பார்வையில் மங்கலான தன்மையும், குறைபாடும் உண்டாகிறது.
கருவிழியின் பின்பகுதியில் அமையப்பெற்றுள்ள விழித்திரையில் ஒளியை குவிப்பதில் சீரற்ற தன்மை - பாரம்பரிய மரபணு குறைபாடு- கெரடோகோனஸ் எனும் பாதிப்பு - கண் நோய் - ஆகிய பல்வேறு காரணங்களால் இத்தகைய பார்வைத் திறன் குறைபாடு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பு நான்கு வகைகளில் ஏற்படக்கூடும் என்றும், இதற்கு பல்வேறு அறிகுறிகள் உண்டு. குறிப்பாக இரவு நேரத்தில் ஏற்படும் தலைவலியும் இதற்கான அறிகுறிதான். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண் வைத்திய நிபுணர்களை அணுகினால் அவர்கள் பிரத்யேக பரிசோதனையை மேற்கொண்டு லாசிக் லேசர் சத்திர சிகிச்சை மூலமாக இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். அத்துடன் ஐந்து வகையினதான சிகிச்சைகள் இதற்கு அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது. இத்தகைய பாதிப்பிற்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட பிறகு கண் கண்ணாடி அணியாமல் சீராகவும், இயல்பாகவும் பார்வையை பெறலாம்.
வைத்தியர் கல்பனா தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM