ஹல்துமுல்ல இலுக்தென்ன பகுதியில் கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு

26 Nov, 2025 | 11:06 AM
image

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவின் இலுக்தென்ன பகுதியில் நடத்திய இரண்டு நாள் சோதனை நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டு, பின் அவை தீயிட்டு அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இரண்டு நாட்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு கஞ்சா தோட்டங்களை முற்றுகையிட்டு, பின் அவற்றை தீயிட்டு அழித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின்போது கஞ்சா தோட்டங்களில் இருந்து கஞ்சா மாதிரிகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு, பின்னர், அந்த கஞ்சா தோட்டங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கை வேளையில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகிறது.

சோதனையிடப்பட்ட கஞ்சா தோட்டங்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

சுமார் 2 ½ ஏக்கர் பரப்பளவில் சுமார் 36,240 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட ஒரு கஞ்சா தோட்டம்

சுமார் 2 ½ ஏக்கர் பரப்பளவில் சுமார் 32,850 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட ஒரு கஞ்சா தோட்டம்

சுமார் 01 ஏக்கர் பரப்பளவில் சுமார் 22,140 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட ஒரு கஞ்சா தோட்டம்

சுமார் 01 ஏக்கர் பரப்பளவில் சுமார் 12,770 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட ஒரு கஞ்சா தோட்டம்

சுமார் ¼ ஏக்கர் பரப்பளவில் சுமார் 8,520 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட ஒரு கஞ்சா தோட்டம்

115 கிலோ உலர்ந்த கஞ்சாச் செடிகள் கொண்ட ஒரு கஞ்சா தோட்டம் ஆகிய தோட்டங்கள் சுற்றிவளைக்கப்பட்டு பின், அவை தீ வைத்து அழிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57