மாதமொன்றுக்கு சுமார் 1400 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் ; 18 பில்லியன் டொலர் இலக்கில் 80 சதவீதத்தை அண்மித்துள்ளோம் - ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவர்

25 Nov, 2025 | 03:03 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது ஏற்றுமதி வருமானத்தில் நேர்மறையான அதிகரிப்பினை அவதானிக்க முடிகிறது. ஏற்றுமதி வருமானம் மாதமொன்றுக்கு சராசரியாக 1400 மில்லியன் டொலரை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது. இவ்வாண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள 18 பில்லியன் டொலர் இலக்கில் 80 சதவீதத்தை அண்மித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஒக்டோபரில் 1474 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானமாகக் கிடைத்துள்ளது. வர்த்தகப் பொருள் ஏற்றுமதி வருமானம் 1158 மில்லியன் டொலராகும். சேவைத்துறையின் ஏற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலராகும்.

ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் மாதமொன்றுக்கு சராசரியாக 1400 மில்லியன் டொலரை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தைகளிலுள்ள போட்டித்தன்மையில் நாம் வெற்றி பெற்றுள்ளமையே இதற்கான பிரதான காரணியாகும்.

அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மன், இதாலி, பெல்ஜியம், ஹொங்கொங் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. 

பிராந்திய அடிப்படையில் அவதானிக்கும் போது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்டவற்றுக்கான ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன. இதனை மேலும் அதிகரிப்பதற்காக ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

2036இல் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த இலக்கை அடைவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம்.

வருட இறுதியில் அது குறித்த அறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். இவ்வாண்டுக்கான எமது ஏற்றுமதி வருமான இலக்கு 18 பில்லியன் டொலர்களாகும். அந்த வகையில் இதுவரையில் ஏற்றுமதி வருமானம் 14 400 மில்லியன் டொலர்களைக் கடந்துள்ளது.

எமது இலக்கில் 80 சதவீதத்தை அண்மித்துள்ளோம். எதிர்வரும் மாதங்களில் எமது இலக்கை வெற்றி கொள்வதற்கான பயணத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

2026இல் இதனை விட சிறந்த ஏற்றுமதி வருமான வளர்ச்சியை எட்ட முடியும் என்று நம்புகின்றோம். ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக இவ்வாண்டிறுதியில் தீர்வை வரி சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏற்றுமதித்துறையில் பெருந்தோட்டத்துறை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தேயிலை, இறப்பர், தேங்காய் என்பவற்றால் பாரிய ஏற்றுமதி வருமானம் கிடைக்கின்றது. குறிப்பாக தேயிலை ஏற்றுமதி வருமானம் 1300 - 1450 மில்லியன் டொலராகக் காணப்படுகிறது.

இறப்பர் ஏற்றுமதி வருமானம் 900 - 950 மில்லியன் டொலருக்கு குறைவான மட்டத்திலேயே காணப்படுகிறது. தெங்கு உற்பத்திகள் ஊடாக கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஏற்றுமதி வருமானம் 43 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதாவது இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 1 பில்லியன் டொலரைக் கடந்துள்ளது.

இறப்பர் உற்பத்தியில் 33 சதவீத ஏற்றுமதி அமெரிக்க சந்தைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். எனினும் இவ்வாண்டு 20 சதவீத தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசாங்கத்திடம் சலுகைகளை கோரியிருக்கின்றனர். அது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை மேம்படுத்துவதற்கு சர்வதேசத்துடனான வர்த்தக உடன்படிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். அதற்காக தற்போது விசேட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:35:34
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29