புகைபிடிக்காதவர்கள் மத்தியில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் தொகை கடந்த ஒரு தசாப்த காலத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் அதற்கு வளிமண்டல மாசடைதலே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானியாவின் மிகப் பெரிய புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிலையமான லண்டன் புரொம்டன் மருத்துவமனையால் தேசிய மட்டத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு முன்னர் நுரையீரல் புற்றுநோய்க்கு பத்தில் ஒன்பது பங்கிற்கு காரணமாக புகைத்தல் விளங்கியது.
ஆனால் தற்போது புகை பிடிப்பவர்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் புகைபிடிக்காதவர்கள் மத்தியிலான நுரையீரல் புற்றுநோய் கடந்த ஒரு தசாப்த காலத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளமை நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வளி மாசடைதலே புகைக்காதவர்கள் மத்தியிலான நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதேசமயம் சீனாவிலுள்ள முக்கிய நகரங்களில் கடந்த 10 – -15 வருட காலப் பகுதியில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் தொகை பெரிதும் அதிகரித்ததற்கு வளிமண்டல மாசாக்கத்துடன் கூடிய பனிப் புகையே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM