வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா மாவட்டத்தின் அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண நவகுண்ட பட்ஷ அஷ்டபந்தன நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிசேக பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.
நேற்று விநாயகர் வழிபாடு, யாகபூஜை, மஹாபூர்ணாகுதி, தீபாராதனை, வேத திருமுறை பாராயணம், பலிகள், கும்பவீதி பிரதட்சனம் நடத்தப்பட்டு நேற்று காலை 9.11 மணி முதல் 10.41 மணி வரை மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், எஜமான் அபிசேகம், தசமங்கள தரிசனம், ஆசியுரைகள், திருவருட் பிரசாதம் ஆகியன நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க இராமர் மலையின் வனப்பகுதியிலிருந்து பரந்து விரிந்த வட்டப்பாறையில் அமைந்துள்ள கன்னிமாரியம்மன் ஆலயத்திலிருந்து கடந்த 20ஆம் திகதி கங்கா தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, நேற்றைய தினம் கர்ம ஆரம்பம், கலசங்கள் மற்றும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை, நவகுண்ட ஹோமம், சூரிய சந்திர பூஜைகள் ஆகியன நடத்தப்பட்டன.
22ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை விநாயகர் வழிபாடு, பூதசுத்தி, தைலாப்பியங்கம். யாகபூஜை, தேவி கட்கமால மந்திர ஹோமம், சர்வாஞ்சலி, சமர்ப்பணம் என்பன நடைபெற்று எண்ணெய் காப்பு சாத்துதல் நிகழ்வு நேற்று இரவு 7 மணி வரை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, விநாயகர் வழிபாடு விம்ப சுத்தி, கும்பபூஜை நியாசங்கள், யாகபூஜை, விசேட திரவிய ஹோமம் ஸ்பரிசாகுதி, சர்வாஞ்சலி சமர்ப்பணம் நடத்தப்பட்டு, அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டன.
20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அத்தோடு இன, மத, மொழி வேறுபாடின்றி நாடு தழுவிய ரீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மஹா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கும்பாபிஷேக சமய கிரியைகள் பிரதிஸ்டா பிரதம குருவான யாழ். சுன்னாகத்தைச் சேர்ந்த கிரியா தத்துவநிதி சிவாகம பூசணம் சிவஸ்ரீ சர்வேஸ்வர ஸ்ரீகாந்த குருக்கள் தலைமையில், கும்பாபிஷேக ஒழுங்கமைப்பு யாக அலங்காரமணி, சிவஸ்ரீ செ.தியாகராஜா சர்மா, சர்வசாதகம் சாதக இளஞ்சுடர் சிவஸ்ரீ துராகீச குருக்கள் உட்பட பல சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM