(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தன்னிச்சையான முறையில் இடைநிறுத்திய அபிவிருத்திக் கருத்திட்டங்களினால் நாட்டின் அபிவிருத்தி தான் இல்லாதொழிந்தது. மாலபே- கொழும்பு இலகு புகையிரத சேவை கருத்திட்டம், அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் ஆகிய அபிவிருத்தி திட்டங்களை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.நாட்டுக்கு பயனுடையதாக அமையும் கருத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வரவு - செலவுத் திட்டம் என்பது வெறும் கணக்கல்ல, வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் முறையாக செயற்படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் வரவு - செலவுத் திட்டத்தில் உரையாற்றவில்லை. குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறோம்.ஏனெனில் பாதீட்டின் முன்மொழிவுகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தன்னிச்சையான முறையில் இடைநிறுத்திய அபிவிருத்திக் கருத்திட்டங்களினால் நாட்டின் அபிவிருத்தி தான் இல்லாதொழிந்தது. மாலபே- கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரையிலான இலகு புகையிரத சேவை திட்டத்தை கோட்டபய ராஜபக்ஷ முறையற்ற வகையில் இரத்துச் செய்தார். ஊழல் செய்ய முடியாது என்ற காரணத்தால் தான் இந்த திட்டம் நீக்கப்பட்டது.
அதேபோல் அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தையும் கோட்டபய ராஜபக்ஷ இரத்துச் செய்தார்.இதனால் 500 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியை இலங்கை இழந்தது. ஆகவே இலகு புகையிரத சேவை கருத்திட்டம் மற்றும் எம்.சி.சி ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். நாட்டுக்கு பயனுடையதாக அமையும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் பற்றி வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முறையற்ற வகையில் விமான கொள்வனவு மற்றும் ஊழல் மோசடியால் இந்த நிறுவனம் நிதியியல் ரீதியில் பாதிக்கப்பட்டது.ஆகவே ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் நிதி செயலாற்றுகை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
கொழும்பு நகர அபிவிருத்தி மற்றும் கொழும்பு நகரில் தோட்ட பகுதிகளில் வாழ்பவர்கள் குறித்து வரவு - செலவுத் திட்டத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதனை தாங்கிக் கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களுக்கு கிடையாது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இது முறையற்றது, ஊடக சுதந்திரத்தை மலினப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம். ஏனெனில் இன்னும் நான்கு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM