இணையவழி மோசடி வலையில் சிக்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி !

Published By: Digital Desk 3

24 Nov, 2025 | 03:41 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச இணையவழி மோசடி கும்பலின் வலையில்  ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தபால் திணைக்களத்தை சேர்த்தவர்களை போன்று நடித்து பொதி ஒன்றுக்கு இணையம் வழியாக பணத்தை செலுத்துமாறு கோரி நீதிபதியின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி சுமார் 400,000 ரூபாவை மோசடி செய்துள்ளனர்.

அதாவது, இந்த இணையவழி மோசடி கும்பல் தபால் திணைக்களத்திற்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும்,  அதனை பெற்றுக் கொள்ள சிறிய கட்டணத்தை (பொதுவாக ரூ. 100 க்கும் குறைவானது) செலுத்துமாறு  இணைய கட்டண இணைப்பு ஒன்றின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். 

அதனை நம்பி மக்கள் தங்கள் வங்கி விவரங்களை பதிவிட்டதும், மோசடி கும்பல்  கணக்கிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, திருடப்பட்ட பணத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றுகின்றனர்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஒருவர் மருதானை தபால் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை எனவும் விழிப்புடன் இருக்குமாறும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் தபால் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவின் துணை பணிப்பாளர், 

இந்த மோசடி வேகமாக விரிவடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க டொலர்கள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், சுவிஸ் பிராங்குகள் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகள் போன்ற அதிக மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களில் இழப்புகள் ஏற்பட்டதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன.

மோசடி கும்பல் உத்தியோகபூர்வ தபால் திணைக்களத்தின் பக்கத்தைப் போன்ற போலி வலைத்தளங்களையும் உருவாக்கி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஓடிபி (OTP) குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத் தடுப்பு பிரிவு ஆகிய அனைத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் அல்லது டெபிட்  வங்கி அட்டை மூலம் எந்தவொரு ஒன்லைன் கொடுப்பனவுகளையும் தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தபால் சேவைகளுடன் இணைக்கப்பட்டதாகக் கூறி இதுபோன்ற எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம்.

இந்த மோசடி ஒரு தனி நபரால் நடத்தப்படுகிறதா அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குழுவால் நடத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகளால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என மீண்டும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57