மூன்று வயது பேரனை தீண்டி­ய­ தாக நாகபாம்பை கம்­பியொன்றில் சுருக்கு வைத்து பிடித்­துக்கொண்டு  அதனை முதி­யவர் ஒருவர்  வைத்­தியசாலை க்கு கொண்டு சென்­றுள்ளார். கல­வ­ரத்­துடன்  காணப்­பட்ட முதி­யவர் குறித்த பாம்­பினை  மக்கள் கூடி நின்ற இடத்­திற்கு  தூக்­கிக்­கொண்டு ஓடி­யதால் வைத்­தியசாலையில் நின்றி ­ருந்த நோயா­ளர்கள்  ஓட்­ட­மெ­டுத்த  சம்­ப­வ­மொன்று  நாவ­லப்­பிட்டி லக்­ச­பான பகு­தியில் இடம்பெற்­றுள்ளது. 

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய ­வ­ரு­வ­தா­வது,

நேற்று காலை  பெற்றோர் வேலை க்குச் சென்­றி­ருந்த நிலையில் குறித்த சிறுவன் தனது தாத்தா – பாட்­டியின் பரா­ம­ரிப்பில் இருந்த சமயம் வீட்­டுக்கு அருகில்  விளை­யா­டிக்கொண்­ டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் அங்கு குவி த்து  வைக்­கப்­பட்­டி­ருந்த விற­கு­க­ளுக்குள் பதுங்­கி­யி­ருந்த  நாகம் ஒன்று சிறு­வனை தீண்­டி­யுள்­ளது. இதை­ய­டுத்து அய­ல­வர்கள்  சிறு­வனை லக்­ச­பான வைத்­தியசாலைக்கு கொண்டு சென்­றுள்­ளனர். 

இந் நிலையில் தீண்­டிய பாம்­பினை கொண்டு செல்­வதன் மூலம் வைத்­தி­யர்­க­ள் சிறு­வ­னுக்கு வைத்­தியம் செய்­வ­தற்கு இல­கு­வாக இருக்­கு­மென நம்­பிய  முதி­யவர் பாம்­பினை கம்பி ஒன்றில் வளையம் போல் சுருக்குச் செய்து  பிடித்து அதனை வைத்­தியசாலைக்கு கொண்டு சென்­ றுள்ளார்  தனது பேரனை பாம்பு தீண்­டி­யதால் கல­வ­ரத்­துடன் காணப்­பட்ட முதி­யவர் தாம் பிடித்த பாம்­பினை அப்­ப­டியே  தூக்­கிக்­கொண்டு  வைத்­தி­யரை தேடி மக்கள் கூட்­ட­மாக இருந்த பகு­திக்குள் ஓடி­யதால்  அங்கு  நின்­றி­ருந்த நோயா­ளர்கள்  ஓட்­ட­மெ­டுத்­துள்­ளனர். பாம்பு கடிக்கு இலக்­கான குறித்த சிறுவன் முதலில் லக்­ச­பான வைத்­தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக நாவ­லப்­பிட்டி வைத்­தி­ய­சா­லை க்குக் கொண்டு செல்­லப்­பட்டு அங்­ கிருந்து கண்டி போதனா வைத்­திய சாலைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். 

சிறு­வனின் தாத்தாவினால் பிடிக் கப்பட்டு காயங்களுக்குள்ளான பாம்பு  நாவலப்பிட்டி வைத்தியசாலை நிர்வா கத்தினூடாக பேராதெனிய மிருக வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது