வடக்கில் இடம்பெறும் அனைத்து அசம் பாவிதங்களுக்கும் புனர் வாழ்வளிக்கப்பட்ட புலிகளே காரணமென்றதவறான அபிப்பிராயத்தை தெற்கு மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அனைத்து விடயங்களுக் கும் விடுதலை புலிகள் பேரை சொல்வதை ஏற்க முடியாது.
தெற்கில் வாழும் மக்கள் வடக்கில் என்ன நடப்பதாக கேள்விப்படுகின்றார்களோ அதை அப்படியே நம்பிவிடுவதாக இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் ஆங்காங்கே எதேட்சையாக நடக்கும் விடயங்கள் தேசிய பாதுகாப்புக்கு என்றும் பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. சிலர் வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் விடுதலை புலிகளே காரணம் என கூறுகின்றனர். அனைத்து விடயங்களுக்கு விடுதலை புலிகள் பேரை சொல்வதை ஏற்க முடியாது. சில சம்பவங்களுக்கு விடுதலை புலிகளுடன் இலகுவாக இணைப்பை ஏற்படுத்துகின்றனர். இது உண்மைக்கு அப்பாற்பட்டது.
தற்போது வடக்கில் உருவாகியதாக கூறப்படும் ஆவா குழுவினர் விடுதலை புலிகள் அல்லர். மக்கள் தெற்கில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால் ஒரு குழுவை மாத்திரம் இதற்கெல்லாம் காரணம் என்று கூற முடியாது. இவர்களை 1971 தொடக்கம் 1981 வரையில் அடையாளம் காணப்பட்ட குழுவாக நாம் கூறிவிட முடியாது.
நாம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்துள்ளோம் ஒரு சிலர் அவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபடலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் பேரும் நாளைக் காலை எழுந்து துப்பாக்கியை ஏந்தி போர் செய்கின்றார்கள் என்று அர்தப்படுத்திக்கொள்ள கூடாது. அனைத்து பிரச்சினைகளையும் விடுதலை புலிகளிடம் தொடர்பு படுத்துவதால் உண்மையான பிரச்சினையின் அடித்தளத்தை விளங்கிக்கொள்ள முடியாது போய்விடும். இதனை தேசிய பிரச்சினையோடும் தொடர்புபடுத்துகின்றனர்.
கோப்பாயில் இரண்டு பொலிஸ் வீரர்களை தாக்கிய சம்பவத்தில் நாட்டின் சமாதானம் சீர்குலைந்ததாக வெளிப்படுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தேசிய பிரச்சினைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்துவிடாது.
தெற்கில் உள்ளவர்கள் அவர்கள் என்ன காதில் கேட்கிறார்களோ அதுவே உண்மை என நம்புகிறார்கள். வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகளையும் அவர்கள் அவ்வாறே கருதுகின்றார்கள். வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாம் மகாநாயக்க தேர்ர்களையும் வடக்கில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். அவர்கள் இம்மாதம் 28,29 ஆம் திகதிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். அவர்கள் வடக்கில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM