நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

23 Nov, 2025 | 02:22 PM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய வீதியில் உள்ள தெமடகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற கார் எதிர் திசையில் வந்த பஸ்ஸ_டன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காரின் சாரதி பலத்த காயமடைந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் 51 வயதுடைய படல்கும்புர - மூணகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணந்துறை - களுத்துறை வீதியின் களுத்துறை வடக்கு பகுதியில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற வேன், அதே திசையில் பயணித்த சைக்கிலுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது, 

இதன்போது, விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிளோட்டி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04
news-image

நாட்டில் கையிருப்பிலுள்ள எரிபொருள் எவ்வளவு காலத்திற்குப்...

2026-03-17 11:31:35
news-image

எதிர்காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய சூழல்...

2026-03-17 11:26:30