(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று முன்தினம் மாலக இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி தயாரித்த வரவு - செலவுத் திட்ட பத்திரத்தை ஜனாதிபதி வாசித்தார்.
நாட்டின் கையிருப்பு 2027ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது, நாட்டின் பொருளாதாரம் 6.3 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது 6.2 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. சுற்றுலாத்துறையினூடாக மாத்திரம் இலாபத்தை ஈட்ட முடியாது.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த எந்தவொருத் திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.மாறாக கடன் வாங்கி அரச நிர்வாகத்தை மேம்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது.இதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM