(பா.ருத்ரகுமார்)

புதிய வெளிவிவகார அமைச்சர் நாளைமறுநாள் நியமிக்கப்படுவார் எனவும் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உண்டு எனவும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய வசந்த சேனாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.