கொழும்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஜனன தினப் பெருவிழா ; விசேட தபால் முத்திரை வெளியீடு

22 Nov, 2025 | 03:41 PM
image

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினப் பெருவிழா நிகழ்வு, இலங்கை கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (22) காலை ஆரம்பமாகியது.

இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமாக, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை அரசின் விசேட தபால் முத்திரை வெளியீட்டு விழா சாயி மத்திய நிலையத்தில் நடைபெற்றது. 

மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனைகளுக்கு அமையவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வேண்டுகோளின் பேரிலும் இந்த விசேட தபால் தலை வெளியிடப்பட்டது. 

தபால் தலை வெளியீட்டு விழாவில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், இலங்கை உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் எஸ்.  துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரத்னம் ஆகியோருடன், சாயி மத்திய நிலையத்தின் இலங்கைத் தலைவர் எஸ். என். உதயநாயகன், இலங்கை தபால் திணைக்களத்தில் முத்திரை வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளர் லங்கா டி சில்வா, விளம்பரப் பிரிவு அதிகாரி எஸ். ஜலதீபன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

படப்பிடிப்பு S.சுரேந்திரன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28