இன்றைய சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஒரு கழகத்தில் மாத்திரமே வெளிநாட்டு வீரர்கள் செரெண்டிப் எதிர் இ.போ.ச., சோண்டர்ஸ் எதிர் கிறிஸ்டல் பெலஸ்

22 Nov, 2025 | 02:03 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்ட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மேலும் இரண்டு போட்டிகள் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறவுள்ளது.

ஏ குழுவுக்கான இந்த இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள மாவனெல்லை செரெண்டிப், இ.போ.ச., சோண்டர்ஸ், நாவலப்பிட்டி கிறிஸ்டல் பெலஸ் ஆகிய நான்கு கழகங்களில் செரெண்டிப் கழகத்தில் மாத்திரமே வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

அத்துடன் இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றம் 14 கழகங்களில் செரெண்டிப் கழகத்தில் மாத்திரமே அதிகப்படியான 13 இளம் வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

செரெண்டிப் எதிர் இ.போ.ச.

செரெண்டிப் கழகத்துக்கும் இலங்கை போக்குவரத்து சபை கழகத்துக்கும் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளில் செரெண்டிப் கழகம் சற்று பலம் வாய்ந்ததாக தென்படுவதால் அந்த அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இலங்கை இளையோர் (20 வயதின்கீழ்) அணியில் இடம்பெற்ற அப்துல் ரஹ்மான், மொஹமத் பஸ்லான், மொஹமத் ரியாஸ், மொஹமத் பஸாம் (அனைவரும் ஹமீத் அல் ஹுசெய்னி வீரர்கள்),விஜயகுமார் அபிஷான் (யாழ்ப்பாணம்) ஆகிய ஐந்து வீரர்கள் செரெண்டிப் அணியில் இடம்பெறுகின்றனர்.

அத்துடன் கானாவைச் சேர்ந்த 4 வீரர்கள் செரெண்டிப் அணியில் பதிவாகியுள்ளனர்.

இ.போ.ச.  அணியில் அப்துல் ரஹ்மான், எஸ். ரத்நாயக்க, மொஹமத் இஸியான், அப்துல் கலாம் ஆகிய நான்கு இளம் வீரர்களும் சிரேஷ்ட வீரர்களான சண்முகராஜா சஞ்சீவ் (முன்னாள் தேசிய வீரர்), சமன் குமார, ஜனக்க சமிந்த ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

குழாம்கள்

செரெண்டிப் கழகம்: சுஜய் கிருஷ்ணா, மொஹமத் சல்மான், ரிஷாத் உமர், மொஹமத் ஸெய்த், மஸாஹிர் ஆய்மான், மொஹமத் ரியாஸ், மொஹமத் ரஹுமான், இனாம் ஷாதிர், விக்னேஷ் விஜயகுமார், மொஹமத் ஆஷிர், மொஹமத் சப்ஹான், நவாஸ் உமைர், மொஹமத் சப்றி, அர்மாஸ் அஹமத, மொஹமத் ஸமீல், மொஹமத் பர்ஹான், விஜயகுமார் அபிஷான், மொஹமத் பஸ்லான், மொஹமத் பஸ்மில், மொஹமத் சாஜித், மொஹமத் லுப்தி, ஃப்ரிம்ப்பொங் யாவ், மொஹமத் அப்துல்லா, மொஹமத் அர்ஹம், மொஹமத் பஸாம், அப்துல் ரஹ்மான், ஓடூம் இனொக், சார்ள்ஸ் குவாபெனா, டார்க்கோ ஜொர்ஜ். பயிற்றுநர்: எம்.ஆர்.எம். முர்ஷித். முகாமையாளர்: எம். எச். எம். நௌஸில்.

இ.போ.ச. கழகம்: ஜீ. டி. சத்துரங்க, அப்துல் ரஹ்மான், மஹேஷ் குமார, துவான் பாஹிம், சமன் குமார, ஆர். உதயஷான்த, ஜனக்க சமிந்த, துமிது ஹெட்டிஆராச்சி, சண்முகராஜா சஞ்சீவ், நுவன் ஜயவீர, எஸ். ரத்நாயக்க, மொஹமத் இன்ஷாப், ஏஞ்சலோ மெனுவல், தினேஷ் மதுசன்க, லக்ஷான்த டினார, மொஹமத் மின்ஹாஜ், நுவன் எட்வேர்ட், நாலக்க கன்னங்கர, மொஹமத் இஸியான், ஜகத் ரோஹன, அப்துல் கலாம், சுதேஷ் சுரங்க, மொஹமத் சாஜித், ஆர். அனாம், குமார விதுர்ஷன. பயிற்றுநர்:  எம். என்.எம். இஸ்ஸதீன்.  முகாமையாளர்: லலித் ரவிந்த்ர.

சோண்டர்ஸ் எதிர் கிறிஸ்டல் பெலஸ்

இன்று இரவு 8.00 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்தை கிறிஸ்டல் பெலஸ் எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரண்டு கழகங்களிலும் உள்ளூர் வீரர்கள் மாத்திரம் இடம்பெறுவதுடன் அவர்களது சிறந்த ஆற்றல்கள் வெளிப்படும் எனவும் இந்தப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வழமைபோல் சோண்டர்ஸ் கழகம் தனது சிரேஷ்ட வீரர்களில் நம்பிக்கை வைத்து விளையாடவுள்ளது.

சமீர பெரேரா, டிலான் கௌஷல்ய, ஏ.எம்.எம். நளீம், இந்தீவர உதார, டி. எஸ். ராஜபக்ஷ, சுந்தரராஜ் நிரேஷ் ஆகிய சிரேஷ்ட வீரர்களுடன் பெத்தும் கிம்ஹான், மொஹமத் ஸெய்த், ஜேக்கப் அட்கின்சன், ஸியாட் முப்ஸால் ஆகிய இளம் வீரர்களும் சோண்டர்ஸ் அணியில் இடம்பெறுகின்றனர்.

கிறிஸ்டல் பெலஸ் கழகத்தில் முஹம்மத் முபீத், முஹம்மத் சஜாத், மதுசன்க லியனகே, ஜெயகுமார் நிரஞ்சன், பௌஸிஅல் துஷாரி, கல்ஹார ஹெட்டிஆராச்சி, நாகரத்தினம் அஜித் குமார் ஆகியோர் கிறிஸ்டல் பெலஸ் கழகத்தில் முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

குழாம்கள்

சோண்டர்ஸ் கழகம்: சந்தருவன் லக்ஷான், டி. எஸ். ராஜபக்ஷ, எம். பிரியதர்ஷன, ஏ. எம். எம். நளீம், ஜீ. சந்த்ரசேகர, டிலான் கௌஷல்ய, ஸியார்ட் முபாஸல், பெத்தும் கிம்ஹான், சமீர பெரேரா, இந்தீவ உதார, நிப்புன சின்தக, சுந்தரராஜ் நிரேஷ், முஹம்மத் ஷஹித், மொஹமத் ஸெய்த், மொஹமத் பாத்திஹ், ஜேக்கப் அட்கின்சன், ஜே. எம். ரம்ஸான், மொஹமத் ஒசாமா, அப்துல் அஸிஸ், மொஹமத் பௌசான், ககானா ரஷ்மிக்க, கல்பனா ரஷ்மிக்க, தனுக்க தனஞ்சய, விமுக்தி மதுவன்த. பயிற்றுநர்: டி ஷான்தசிறி. முகாமையாளர்: ஜகத் ரோஹன.

கிறிஸ்டல் பெலஸ் கழகம்: முஹம்மத் முபீத், ஜெயக்குமார் நிரஞ்சன், மொஹமத் சப்ரான், கணேஷ் ராஜ்குமார், பௌஸி அல் துஷாரி, நிஸ்மி அஹமத், மொஹமத் சாஜித், ராஜு செல்வராஜ், மொஹமத் இனாம், மொஹமத் ஷெமாக், பாசிஸ் லுக்மான், மொஹமத் இல்ஷாம், மொஹமத் முஜாஹீத், மதுசன்க லியனகே, உதயகுமார் அரிகரன், ஹேமன்த பண்டாரகொட, மொஹமத் அத்னாத், மொஹமத் ரிப்லான், சின்னராசா அஸ்கார், கல்ஹார ஹெட்டிஆராச்சி, சிவசெல்வன் துஷாந்தன், முஹம்மத் பர்வீஸ், மொஹமத் ஷமில், நாகரத்தினம் அஜித் குமார்.பயிற்றுநர்: நலிந்த கோனார. முகாமையாளர்: மொஹமத் ஹில்மி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-04-13 22:26:01
news-image

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில்...

2026-04-13 16:00:02
news-image

உசைன் போல்ட் சாதனை முறியடிப்பு: 18...

2026-04-13 13:33:42
news-image

மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் றோயல்...

2026-04-13 01:52:00
news-image

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய...

2026-04-12 21:56:11
news-image

20இன் கீழ் பெண்களுக்கான 10 கி.மீ. ...

2026-04-12 20:00:19
news-image

நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் சஞ்சு செம்சன்...

2026-04-12 00:43:44
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3ஆவது வெற்றியை...

2026-04-11 23:46:46
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடான ஒருநாள் தொடரை ...

2026-04-11 23:37:22
news-image

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி...

2026-04-11 00:50:58