சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்ய உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

22 Nov, 2025 | 03:04 PM
image

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தடையின்றி சுதந்திரமாக விற்பனை செய்வதற்கு  உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மிரிஹான பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து 8 இலட்சம் ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து, போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 2 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20