வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் பொலிஸ் வெற்றி; மொரகஸ்முல்லைக்கு வெற்றிதோல்வியற்ற முடிவு

22 Nov, 2025 | 11:11 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில்   பி குழுவுக்கான ஆரம்பப் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் விளையாடிய பொலிஸ் கழகமும் மொரகஸ்முல்லை கழகமும் தலா நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடிய எதிரணிகளை அதிரச் செய்தன.

தர்கா நகர் சுப்பர் சன் கழகத்திலும் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்திலும் தலா 4 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றபோதிலும்  எதிர்பார்த்த அளவுக்கு அவர்களது திறமை வெளிப்படவில்லை. அவர்களை விட உள்ளூர் வீரர்களின் வேகமும் ஆற்றல்களும் சிறப்பாக இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வெள்ளிக்கிழமை (21) மாலை ஆரம்பப் போட்டிகள் நடத்தப்பட்டன.

பொலிஸ் கழகம் வெற்றி

மின்னொளியில் நடைபெற்ற பொலிஸ் கழகத்துக்கும் தர்கா நகர் சுப்பர் சன் கழகத்துக்கும் இடையிலான போட்டியில் பொலிஸ் கழகம் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

இடைவேளையின்போது பொலிஸ் கழகம் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

சுப்பர் சன் கழகத்தில் அணித் தலைவர் குவானொ பொன்சு உட்பட நான்கு வெளிநாட்டு வீரர்கள் விளையாடிய போதிலும் அவர்களது ஆற்றல்கள் வெளிப்படவில்லை.

போட்டி ஆரம்பித்தது முதல் மிகச் சிறந்த வியூகங்களுடனும் சிறப்பான பந்து பரிமாற்றங்களுடனும் விளையாடிய பொலிஸ் கழகம் 11ஆவது நிமிடத்தில் முதலாவது கோலை போட்டது.

தமித் சமன்தவின் கோர்ணர் உதையைப் பயன்படுத்தி சாலக்க நிஷான்த மிகவும் இலாவகமாக கோல் போட்டார்.

இதனைத் தொடர்ந்து சுப்பர் சன் கழகத்திற்கு கோல் போட கிடைத்த சில வாய்ப்புகள் தவறவிடப்பட்டது.

மறுபக்கத்தில் தொடர்ந்து திறமையாக விளையாடிய பொலிஸ் கழகம் 5 நிமிட இடைவெளியில் மேலும் 2 கோல்களைப் போட்டு தன்னைப் பலப்படுத்திக்கொண்டது.

38ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து சுப்பர் சன் கோலை நொக்கி உதைக்கப்பட்ட பந்தை கோல்காப்பாளரும் பின்கள வீரர் ஒருவரும் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட தவறை நன்கு பயன்படுத்திக்கொண்ட கயான் ரிவால்டோ தலையால் முட்டி கோல் போட்டார்.

மீண்டும் சுப்பர் சன் கழக பின்களத்தில் ஏற்பட்ட மற்றொரு தவறைப் பயன்டுத்தி இடப்புறத்திலிருந்து ஹசன் அப்துல்லா (43 நி.) பந்தை பலமாக உதைத்து பொலிஸ் கழகத்தின் கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தினார்.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் விட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு இடைவேளையின் பின்னர் மாற்று கோல்காப்பாளர் இனாமுல் ஹசனுடன் விளையாடிய சுப்பர் சன் கழகம் எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது.

ஆனால், பொலிஸ் கழக கோல்காப்பாளர் தினேஷ் மஹேந்திரன் சாமர்த்தியமாக செயற்பட்டு கோல் போடப்படுவதைத் தடுத்த வண்ணம் இருந்தார்.

அதேவேளை சுப்பர் சன் கழகத்தின் மாற்று கோல்காப்பாளர் இனாமுல் ஹசனும் மிக சிறப்பாக செயற்பட்டு பொலிஸ் கழகத்தின் பல கோல் போடும் பல முயற்சிகளை தடுத்து நிறுத்தினார்.

இளம் மாற்று வீரர் ரெய்ஷ் அஹமத் போட்டியின் 80 நிமிடத்தில் உதைத்த கோர்ணர் கிக்கை நன்கு பயன்படுத்திக்கொண்ட அணித் தலைவர் பொன்சு உயரே தாவி தலையால் முட்டி கோல் போட்டார்.

அந்த கோல் சுப்பர் சன் கழகத்துக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.

இப் போட்டியின்போது அரங்கில் இருந்த சுப்பர் சன் கழக ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து தங்களது அணியினரை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

பிரதான கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ள ஜஸ்வர் உமர் தலைமையிலான இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தையும் இரசிகர்கள் பாராட்டத் தவறவில்லை.

சுப்பர் சன் சார்பாக விளையாடிய 20 வயதுக்குட்பட்ட மொஹமத் ரிப்லான், மொஹமத் இம்தாட், ரெய்ஷ் அஹமத் ஆகிய மூவரும் மிகவும் அற்புதமாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது.

மொரகஸ்முல்லை - பெலிக்கன்ஸ் போட்டி

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது

மொரகஸ்முல்லை கழகத்துக்கும் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

மொரகஸ்முல்லை கழகம் உள்ளூர் வீரர்களில் மாத்திரம் நம்பிக்கை வைத்து விளையாடியதுடன் பெலிக்கன்ஸ் கழகம் நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் களம் இறங்கியது.

போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணியினரிதும் ஆற்றல்கள் வெளிப்படவில்லை. அதேவேளை, பெலிக்கன்ஸ் கழகத்தில் விளையாடிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை.

போட்டியின் 12ஆவது நிமிடத்தில் பெஞ்சமின் அத்தோட்டே உதைத்த கோர்ணர் கிக்கை நன்கு பயன்படுத்திக்கொண்ட யசஸ்வின் திரிமான்ன மிக இலாவகமாக கோல் போட்டு பெலிக்கன்ஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் மொரகஸ்முல்லை வீரர்கள் எதிரணியின் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்ததுடன் 2 இலகுவான வாய்ப்புகள் உட்பட குறைந்தது 5 வாய்ப்புகளைத் தவறவிட்டதனர்.

இடைவேளையின் பின்னர் 47ஆவது நிமிடத்தில் திசர டி சில்வா, ஹாதீம் அஹமத் ஆகியோரிடையே பரிமாறப்பட்ட பந்தை பெற்றுக்கொண்ட புபுது சக்குலத வேகமாக  செயற்பட்டு கோலாக்கினார்.

இதனைத் தொடர்ந்து போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியதுடன் ஆட்டத்தில் சுவாரஸ்யமும் ஏற்படத் தொடங்கியது.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் மாறிமாறி கோல் போட எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-04-13 22:26:01
news-image

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில்...

2026-04-13 16:00:02
news-image

உசைன் போல்ட் சாதனை முறியடிப்பு: 18...

2026-04-13 13:33:42
news-image

மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் றோயல்...

2026-04-13 01:52:00
news-image

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய...

2026-04-12 21:56:11
news-image

20இன் கீழ் பெண்களுக்கான 10 கி.மீ. ...

2026-04-12 20:00:19
news-image

நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் சஞ்சு செம்சன்...

2026-04-12 00:43:44
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3ஆவது வெற்றியை...

2026-04-11 23:46:46
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடான ஒருநாள் தொடரை ...

2026-04-11 23:37:22
news-image

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி...

2026-04-11 00:50:58