"முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டம் ; பெருமளவான போதைப்பொருட்கள் மீட்பு!

Published By: Digital Desk 1

22 Nov, 2025 | 01:49 PM
image

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 401 கிராம் ஹெரோயின், 640 கிராம் ஐஸ், 54 கிலோகிராம் 715 கிராம் கஞ்சா, 203,251 கஞ்சா செடிகள், 01 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 01 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 637 போதை மாத்திரைகள் மற்றும் 163 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 968 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 26 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்;டுக்களின்கீழ் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 976 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 28 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02