மரணம், வயோ­தி­பத்தை மருத்­துவம் தடுக்­குமா..?

Published By: Robert

13 Aug, 2017 | 11:34 AM
image

முன்­னொரு காலத்தில் அசாத்­தி­யம் என்று கரு­தப்­பட்­ட­வற்றை எல்லாம் தற்­போ­தைய விஞ்­ஞானத் தொழில்­நுட்பம் இணைந்த மருத்­துவம் சாத்­தியம் என்று நிரூ­பித்துக் காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதே விஞ்­ஞானம் சில­வேளை இயற்­கையின் நிய­தி­களை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான முயற்­சி­களை எடுத்­த­வண்­ண­முள்­ளது.  அதே­போன்று காலங்­கா­ல­மாக மரணம், வயோ­திபம் தொடர்­பான தொடர்ச்­சி­யான ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு தற்­போது அவற்றைத் தடுப்­ப­தற்­கான முயற்­சிகள் நடை­பெற்று வரு­கின்­றன. அவ்­வா­றான சில முயற்­சி­களை இங்கு பார்க்­கலாம்.

 முயற்சி 1: இது மரணம் அல்ல உறக்கம்!

சில்­வியா மற்றும் ஆலன் சின்க்ளைர் தம்­ப­திகள் 40 வரு­டங்­க­ளாகக் கணவன் மனை­வி­யாக வாழ்ந்­த­வர்கள். அவர்­க­ளுக்கு 4 குழந்­தைகள், 8 பேரக்­கு­ழந்­தைகள். அது­மட்­டு­மில்­லாமல், பல குழந்தை பரா­ம­ரிப்பு இல்­லங்­களை பார்த்துக் கொண்­ட­வர்கள். சஸ்ஸேக்ஸ் கடற்­க­ரையை ஒட்­டிய வீட்டில் இனி­மை­யா­க ­வாழ்ந்து கொண்­டி­ருந்த போது, 66 வய­தான சில்­வி­யா­விற்கு நுரை­யீரல் புற்­றுநோய், அதுவும் முற்­றிய நிலை என்று தெரிய வரு­கி­றது. மருத்­துவம் கையை விரிக்க, ஒரு சில வாரங்­களில் மரணம் சில்­வி­யாவை அழைத்துச் சென்று விடு­கி­றது. ஆல­னுக்கும் அவ­ரது குடும்­பத்­திற்கும் இது ஒரு எதிர்­பா­ராத பூகம்பம்! ஒரு­வரை மட்டும் அவர்கள் இழக்­க­வில்லை. ஒரு மனைவி, ஒரு நல்ல தாய், ஒரு அன்­பான பாட்டி என்று மூன்று பேர் அன்று மர­ணித்­த­தாகத் தான் கரு­தப்­பட்­டது. ஆம், சில்­வியா எல்­லா­முமாய் இருந்தார்!

அவ­ரது இறப்பு, அந்தக் குடும்­பத்­திற்கு வேண்­டு­மானால் பெரிய இழப்பு. ஆனால் அந்த மருத்­து­வ­ம­னையில் அமர்ந்­தி­ருந்த அந்த நண்­பர்கள் கூட்­டத்­திற்கு இல்லை. அவர்கள் கண்­களில் ஒரு துளி கண்ணீர் இல்லை. அழு­வ­தற்­கான நேரம் இது­வல்ல என்று உணர்ந்­த­வர்கள் அவர்கள். இறப்புச் செய்தி வந்­த­வுடன் தாம­திக்­காமல் களத்தில் இறங்­கி­னார்கள். தனி அம்­பியூலன்ஸ் ஒன்றில் சில்­வி­யாவின் உடலை பெற்றுக் கொண்­டார்கள். உடல் கெட்­டுப்­போ­காமல் இருக்கச் செய்­யப்­படும் எம்­பாமிங் (embalming) செய்­மு­றைகள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன. ஐஸ் பெட்­டியில் வைக்கும் முன், அமி­லத்தை முறிக்கத் தொண்டை வழியே ஒரு திரவம், மார்­பெ­லும்­பிற்குத் தகுந்த மருத்­துவம், CPR என அனைத்தும் செய்­தா­யிற்று. இரத்­தத்தில் Anti-Freeze சொல்­யூஷன் கலக்­கப்­பட்டு லண்டன் மாந­க­ரத்­திற்கு எடுத்துச் சென்­றார்கள்.

பெட்­டியில் வெப்­ப­நிலை -70 டிகி­ரியை தொட்­ட­வுடன், உடல் அமெ­ரிக்­கா­விற்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. பின்பு, அங்கே ஒரு உலோக பெட்­ட­கத்தில் க்ரையோ­ஜெனிக் முறையில் உடல் பதப்­ப­டுத்­தப்­பட்­டது. அதே அறையில் தான் ­அ­வரின் முன்­னோர்­களின் உடல்­க­ளும் ­அதே முறையில் பதப்­ப­டுத்­தப்­பட்டு வைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. 1977ஆம் வருடம் இறந்­த­வர்­களின் உடல் கூட கெடாமல் இன்னும் பாது­காக்­கப்­ப­டு­கி­றதாம். இவர்கள் என்­றா­வது ஒரு நாள் மீண்டும் உயி­ருடன் வரு­வார்கள் என்­பது அவர்கள் நம்­பிக்கை. ஆனால், இவர்கள் இதற்­காக நம்­பு­வது கட­வுளை அல்ல. நேரம் வரும்­போது, சரி­யான தொழில்­நுட்பம் வரும்­போது, அறி­வி­யலால் இறப்பு என்ற ஒன்றை நிச்­சயம் மாற்ற முடியும் என்று நம்­பு­கி­றார்கள் இவர்கள். அதற்­கா­கவே அனைத்து உடல்­களும் பாது­காக்கப் படு­கின்­றன. இது மரண கடி­கா­ரத்தை நக­ராமல் நிறுத்­தி ­வைக்கும் அதி­சயம்!

முயற்சி 2: மறு­பி­றப்பு மருத்­துவம்

நீங்கள் ஒரு கார் வைத்­தி­ருக்­கி­றீர்கள். அதன் ஏதோ ஒரு உதிர்ப்பாகம் செய­லி­ழந்து விடு­கி­றது, உடனே வேறு ஒரு புது பகுதியை கடை­களில் வாங்கி காரை சரி செய்­வ­தில்­லையா? உங்கள் மடிக்­க­ணி­னியில், தர­வு­களை பேக்கப் எடுத்து வைப்­பீர்கள். ஹார்ட் டிஸ்க்­கிற்கு எதா­வது சேதம் ஏற்­பட்டு டேட்டா காணாமல் போனால், பேக்கப் டேட்­டாவை எடுத்துக் கொள்­வது இல்­லையா?  அதையே தான் மனித உடலில் அறி­வியல் மூலம் இங்­கே ­செய்ய முற்­ப­டு­கி­றார்கள். இதில், முன்­னரே பல படி­களைக் கடந்து விட்டோம் என்­பதும் உண்மை. மீளு­ரு­வாக்கம் என்ற முறைப்­படி, சேத­ம­டைந்த மற்றும் செய­லி­ழந்த உறுப்­புகள் அனைத்­திற்கும் அந்த நோயா­ளியின் ஸ்டெம் செல்கள் வைத்தே புத்­துயிர் ஊட்­டு­கி­றார்கள். முழுக்க முழுக்க பரி­சோ­தனை கூடத்தில் பாது­காக்­கப்­பட்டு வளர்க்­கப்­பட்ட இரத்தக் குழாய்கள், சிறு­நீர்ப்பை, பித்­தப்பை போன்­ற­வற்றை பாதிக்­கப்­பட்ட மனி­தர்­க­ளுக்குப் பொருத்தும் முயற்­சிகள் நடந்த வண்ணம் உள்­ளன. 

முயற்சி 3: அழி­வில்லா டிஜிட்டல் மனிதன்

அழி­வில்லா மனி­தர்­களை உரு­வாக்க எதற்கு உயி­ரியல் மற்றும் மருத்­துவம் பின்னால் ஓடு­கி­றார்கள்? டிஜிட்டல் டெக்­னா­லஜி பக்கம் வாருங்கள் என்று அழைக்­கிறார் புகழ்­பெற்ற கணினி விஞ்­ஞா­னி­யான ரே குர்­சுவில். நம் மூளையில் இருக்கும் அனைத்துத் தக­வல்­க­ளையும் தர­வி­றக்கம் செய்து கணி­னியில் சேமித்து வைத்து விட்டால் போதும். பின்­னாளில், இதை ஒரு ரோபோ­விற்கு அப்லோட் செய்­து­விட்டால், உங்­க­ளுக்கும் உங்கள் நினை­வு­க­ளுக்கும் என்றும் அழிவு இல்லை. 2045ஆம் ஆண்­டிற்குள் இது நிச்­சயம் சாத்­தியம் என்று அதி­ர­வைக்­கிறார் ரே. இவர் ஏதோ உள­று­கிறார் என்று நினைத்து விட வேண்டாம். மூன்று அமெ­ரிக்க  ஜனா­தி­ப­திகள் இது­வரை ரேவின் ஆராய்ச்­சிகள் மற்றும் முயற்­சி­களைப் பாராட்­டி­யி­ருக்­கி­றார்கள். முத்­தாய்ப்­பாக, பில்கேட்ஸ், “செயற்கை நுண்­ண­றிவின் எதிர்­காலம் மற்றும் வளர்ச்­சியைக் கணிப்­பதில் ரேவை மிஞ்­சிய ஆள் இந்த உல­கத்­தி­லேயே இல்லை” என்று புக­ழாரம் சூட்­டி­யி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. அது இருக்­கட்டும், இந்த பதி­வி­றக்கும் சமாச்­சா­ரத்தை அப்­போதே தன­து ‘­பேசும் பொம்­மைகள்’ நாவலில் சுஜாதா எழு­தி­யி­ருந்தார் என்­பது நம்மில் எத்­தனைப் பேருக்கு தெரியும்? 

முயற்சி 4: வயோ­திபம் ஒரு வியாதி தான், அதைக் குணப்­ப­டுத்­தலாம்

மர­ணத்தைத் தடுப்­பது ஒரு புறம் இருக்­கட்டும். பல­ருக்கு இள­மை­யோடு என்றும் வாழ­வேண்டும் என்­பதே கனவு. எலி­சபெத் பரேஷ் ஒன்றும் விதி­வி­லக்­கல்ல. மார்க்­கண்­டே­யனைப் போல் என்றும் இள­மை­யோடு இருப்­பதே அவர் எண்ணம். அவரைப் பொறுத்­த­வரை, வயது முதிர்ச்சி என்­பது ஒரு வியாதி. புற்றுநோய் இரு­தய நோய் போல இந்தக் கொடிய வியா­தி­யையும் குணப்­ப­டுத்த முடியும் என்று நம்­பு­கிறார். அதற்­காக அவர் நடத்தும் ஒரு நிறு­வனம் தான் பயோ­விவா (BioViva). அதில் புகழ்­பெற்ற அமெ­ரிக்க மூலக்­கூறு உயி­ரி­ய­லாளர் மற்றும் உயி­ரியல் நிபுணர் சிந்­தியா கென்யோனின் ஆராய்ச்­சி­களைச் சுற்றி பரி­சோ­த­னைகள் செய்து வரு­கின்­றனர். அதன்­படி, நம் உடம்பின் செல்கள் அனைத்தும் குறிப்­பிட்ட காலத்­திற்குப் பிறகு செய­லி­ழந்து விடு­வது போல அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதை ஜீன் தெரபி மூலம் மாற்றி அமைக்க முடியும். இப்­படிச் செய்­வதால், வய­தான பிறகு ஏற்­படும் எண்­ணற்ற உடல் உபா­தை­களை இல்­லாமல் செய்து விட முடியும் என்று கூறு­கி­றார்கள். ஸ்பானிஷ் தேசிய புற்­றுநோய் ஆராய்ச்சி மையம் இந்த ஜீன் தெர­பியை பயன்­ப­டுத்தி ஒரு எலியின் ஆயுளை 40 சத­வீதம் வரை உயர்த்திக் காட்­டி­யி­ருக்­கி­றதாம்.

இந்த ஆச்­சர்­யத்தின் அடுத்த கட்டமாக, அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மயோ கிளினிக்கில், நம்பத்தகுந்த வகையில் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் விளக்கம் அளிக்கிறார்கள். அதன்படி செனசென்ட் செல்கள் (Senscent Cells) எனப்படும் ஒருவகை செல்கள் தான் நம்மை புற்று நோய் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது. வேலை முடிந்தாலும் இந்த செனசென்ட் செல்கள் உடலிலேயே தங்கி இரட்டிப்பாவதால் நமக்கு வயதாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே, இவ்வகை செல்களை உடலிலிருந்து அகற்றிவிட்டால், வயதாவதைத் தடுக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். - குரூஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையின் ஏற்படும் கட்டியை அகற்றும் நவீன...

2024-09-09 16:00:44
news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20
news-image

“நல்ல மருத்துவர்” என்பவர் யார்?

2024-09-08 11:16:04
news-image

குழந்தைகளின் இதய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-08-31 16:55:30
news-image

முதுகு வலிக்கான நவீன நிவாரண சிகிச்சை

2024-08-29 19:52:57
news-image

புற்றுநோய் பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-08-28 17:07:29
news-image

அல்சைமர் நோயால் ஆசிய நாட்டவர்கள் பலர்...

2024-08-28 17:11:08
news-image

மூளையில் ஏற்படும் கொலாய்டு நீர்க்கட்டி பாதிப்பிற்கான...

2024-08-27 17:42:14
news-image

இரத்த நாள அடைப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-08-26 17:26:59