உலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையில் இருக்கக் கூடிய ஒன்றும் கூட. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியான விற்ற மின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துகளும் இருப்பதால், ஊட்டச் சத்து குறைவில்லாமல் கிடைக்கும்.
எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்தோமானால் அதன் தோளில்தான் விற்றமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கல்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் போன்றவை உள்ளன. எது ஒன்றையும் சுத்தம் செய்வதில் இதன் தோல்தான் முதலிடத்தில் உள்ளது. இதன் தோல் மிகவும் நறுமணம் மிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.
எலுமிச்சையின் தோலில் நம் சருமத்திற்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதன் தோலில் இருக்கக்கூடிய அமிலமானது நம் சருமத்தை மிருதுவாக்கும். மேலும் பளிச் தோற்றத்தை கொடுக்கவல்லது. நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்டுகிறது. எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அத்துடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்தால் முகத்திற்கான ஸ்க்ரப் தயார்.
முகம் பிளீச் செய்தாற்போல் மாறிவிடும். சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமையும் மறையும். எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளை தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
10 நிமிடங்களுக்கு பிறகு அதை வடிகட்டி அத்துடன் தேன் கலந்து பருகலாம். இந்த டீ நம் ஜீரண மண்டலத்தை வலுப்பெற செய்கிறது. மேலும் உடல் எடையைக் குறைக்க உதவும். உடலில் உள்ள ph அளவை சமன்படுத்துகிறது. கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தபின் எலுமிச்சைத் தோலைக்கொண்டு நகங்களின் மேல் 30 விநாடிகள் தேய்த்து பின் கழுவிவிட வேண்டும். இது போல் 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும். இதேபோல் பற்களிலும் தேய்த்து வாய் கொப்புளித்து வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து வெண்மை புன்னகையைப் பெறலாம்.
எலுமிச்சைத் தோலை துருவி ஸ்பிரேயர் உள்ளே போடவும். அத்துடன் ஒயிட் வினிகர் சேர்க்க வேண்டும்.நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் 2 வாரம் வைக்க வேண்டும். கிரானைட் மற்றும் மார்பில் தவிர அனைத்து இடத்திலும் இதனை சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம். வீட்டில் எறும்பு, கரப்பான் தொல்லை இருந்தால் எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM