(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்தாலும், இந்த அரசாங்கத்தால் இதுவரை இந்த உத்தரவாத விலைகளை நிர்ணயித்துக் கொடுக்க முடியாதுபோயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இடையீட்டு கேள்வி ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்தாலும், இந்த அரசாங்கத்தால் கடந்த காலத்திலும் போலவே இன்றேனும் கூட இந்த உத்தரவாத விலைகளை நிர்ணயித்துக் கொடுக்க முடியாதுபோயுள்ளன. வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, வட்டக்காய், நெல் உள்ளிட்ட பல உற்பத்திகளுக்கு அரசாங்கத்தால் உத்தரவாத விலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது போயுள்ளது.
உர மானியமும் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்தபாடில்லை. நாம் பேசும் இத்தருணத்தில் பெரும் போகச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உரம் பெற்றுக்கொள்ள பணம் இல்லை.
உர மானியம் கிடைக்காமையால் விவசாயிகள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். உற்பத்தி செயற்பாடுகளுக்கு உரிய கால நேரத்தில் உர நிவாரண பணம். விவசாயிகளின் கைகளுக்கு செல்ல வேண்டும்.
கடந்த போகத்திலும் விவசாய நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னரே உரம் கிடைத்ததுள்ளது. அதேபோன்று உறுதியான விலை ஒன்றை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்து்கு அதனை செய்ய முடியாமல் போயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சமயத்திலேயே இந்த உர மானியத்தை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM