இலங்கை நிலபுல சந்தையில் முதலீடு செய்பவர்கள் யார்?

19 Nov, 2015 | 11:00 AM
image

இணையவெளி ஆதன சந்தைப்படுத்தல் தளம் Lamudi இலங்கையின் ஆய்வுகளின் அடிப்படையில் சீனா, இந்தியா மற்றும் ஹொங்கோங் ஆகிய நாடுகள் இலங்கையின் ஆதன  சந்தையில் முதலீடு செய்யும் பட்டியலில் முன்னனி வகிக்கின்றன.

இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அடிப்படையில் இலங்கை சந்தையில் முதலீடு செய்யும் நாடுகளை தரப்படுத்துகின்றது Lamudi இலங்கை. அதிகரித்து வரும் அரச ஊக்குவிப்புக்களின் அடிப்படையில் தெற்காசிய வலயத்தில் சர்வதேச முதலீடுகளை உள்வாங்குவதற்கு மிகச் சிறந்த இடமாக இலங்கை காணப்படுகின்றது. 

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில் சீனா, இந்தியா, சிங்கபூர், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி முதலீடுகளின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டு துறை வளர்ச்சிப்போக்கினை காட்டி வருகின்றது. 

அண்ணளவாக 42 வீதமான முதலீடுகள் உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக 50 வீதமான முதலீடுகள் வீடமைப்பு, ஆதன அபிவிருத்தி மற்றும் வர்த்தக மையங்கள் அமைப்பிற்காக செலவிடப்பட்டிருக்கின்றன.

சீனா

மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் சீனா கணிசமான பங்கு வகிக்கின்றது. கடந்த 2014 இல் மட்டும் 400 மில்லியனையும் விட அதிகமான முதலீட்டினை மேற்கொண்டிருக்கின்றது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அதிகமான இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் சீன அனுசரணையுடன்  இடம்பெற்றிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் வீதிக்கட்டமைப்பு துறையிலும் தெற்கு அதிவேக சாலை, மற்றும் கட்டுநாயக அதிவேக சாலை போன்ற பாரிய திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எவிக் அஸ்டோரியா போன்ற ஆடம்பர குடியிருப்பு திட்டங்களுக்கு மேலாக அதிகமானவர்களின் கவனத்தை ஈர்த்த கொழும்பு துறைமுக நகர திட்ட மீள் ஆரம்பப் பணிகளுக்கான சாதக சமிக்ஞைகள் தென்படுகின்றன. குறித்த திட்டமானது 1.4 பில்லியன் அமெரிக்க டெலர்கள் மதிப்புள்ள திட்டமாகும்.

இந்தியா

அதிகளவான தனியார் துறை முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஐ.டீ.சி கொழும்பு, டாடா ஹவுசீங்க் திட்டங்கள், சண்டல் லேண்ட் குடியிருப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் இந்திய நிறுவணங்கள் நேரடியாக முதலீடு செய்கின்றன. அது மாத்திரம் அல்லாமல் இந்திய அபிவிருத்தி துறையினர், கடந்த கால அசாதாரண சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 65,000 வீடுகளையும் அமைக்க இருக்கின்றன.

ஹொங்கொங்

இலங்கையில் அமைக்கப்படும் முன்னணி நிலபுல துறை நாமமான சங்க்ரில்லா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய இரண்டு பிராந்தியங்களில் முதலீடு செய்திருக்கின்றது. கொழும்பில் அமைக்கப்படும் பல்துறை கலப்பு திட்டமானது வர்த்தக மையம், குடியிருப்பு தொகுதிகளை உள்ளடக்கியிருப்பதுடன் ஹம்பாந்தோட்டையில் சுற்றுலாத்துறை நோக்கான திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஹம்பாந்தோட்டையில் அமையப்பெறும் ஆடம்பர ஹோட்டல்கள் அதிகளவான உல்லாச பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் கூட டெஸ்டினி, Hyatt ரீஜென்சி போன்ற வர்த்தக மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி திட்டங்கள் வாயிலாக தொடர்ந்தும் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.

Lamudi பற்றி

2013 ல் ஆரம்பிக்கப்பட்ட Lamudi வளர்ந்துவரும் சந்தைகளை மையமாக கொண்டு இயங்கிவரும் உலகளாவிய ஆதன சந்தைப்படுத்தல் தளமாகும்.மிக துரிதமாக வளர்ந்துவரும் இத்தளம் (நிறுவனம்), ஆசியா, மத்தியகிழக்கு, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளடங்களாக 34 நாடுகளில் 900000 இற்கும் மேலான நிரற்படுத்தல்களை கொண்டு இயங்கிவருகின்றது. 

இந்தமுன்னனி நிலபுல சந்தைப்படுத்தல் தளம், விற்பனை, கொள்வனவு, வாடகைவசதிகளுடன் கூடிய மிகபாதுகாப்பானதானதும் இலகுவாக ஆதனங்களைப் பெற்றுக்கொள்வதற்குமான சேவையினை வழங்கிவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58