அவசரமாக தாந்தாமலையில் போடப்பட்டது தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை!

21 Nov, 2025 | 11:23 AM
image

மட்டக்களப்பு - படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு - படுவான்கரைப் பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் நேற்று வியாழக்கிழமை (20) பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளன.

அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பது வட்டை சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி போடப்பட்டதுடன் மற்றைய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலத்துக்கு அண்மையில் உள்ள பொலிஸ் சாவடி நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலையில் அத்துமீறி கடந்த 2025, நவம்பர்,16, ல் புத்தர் சிலைவைக்கப்பட்டு சரியாக மூன்று தினங்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பெருநிலத்தில் இந்த விளம்பரப்பலகையிடப்பட்டு தாந்தாமலை தமிழரர்களின் பூர்வீக நிலத்தில் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இந்த விளம்பர அறிவிப்பு இடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத்...

2026-09-12 17:44:08
news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55
news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07