“அரசு கூறும் பொய்களுக்கு வரி வைத்தால் நாட்டின் கடன் முடிந்துபோகும்” – சுஜீவ சேனசிங்க

Published By: Vishnu

21 Nov, 2025 | 02:52 AM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்கவும்,  அரசாங்கத்தில் உள்ளவர்களும் குறிப்பிடும் பொய்களுக்கு வரி அறவிட்டால், நாட்டின் மொத்த கடன்களையும் செலுத்தி விடலாம் ஏனெனில் அந்தளவுக்கு அவர்கள் பொய்களை கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் பல உள்ளன. எரிபொருள் தொடர்பிலும் மின்சாரம் தொடர்பிலும் பல பொய்களை கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. பொய்களுக்கு வரி அறவிட்டால் ஜனாதிபதி கூறிய பொய்களின் மூலமே வெளிநாட்டு கடனில் அரைவாசியை செலுத்திவிட முடியும். அத்துடன்   ஆளும் தரப்பின் உறுப்பினர்கள்  மற்றும் அமைச்சர்களின் பொய்களை எடுத்துக்கொண்டால் அதற்கான வரியில் எஞ்சிய அரைவாசி கடனையும் செலுத்தி முடித்துவிடலாம். அந்தளவுக்கு இவர்கள் பொய்யுரைத்துள்ளார்கள்.

பொய்களின் கெப்டன் ஒருவர் இருக்கின்றார். அவரின் உடல் முழுவதும் அதுவே இருக்கின்றது. அவர் பொய்யில் ஊறியவராக இருக்கின்றார். 70 வருட சாபம் என்று கூறிக்கொண்டு அதிலேயே வாழ்வதற்கு முயற்சிக்கின்றனர்

ஜனாதிபதி  சபையில் உரையாற்றிய போது  சிறிய அனுமான் தொடர்பில் குறிப்பிட்டார். ஆனால் பெரிய அனுமான்தான் விகாரையில் தீவைத்தது. தீ பரவும் போது சிறிய அனுமானையே தேடுகின்றனர். அத்துடன் எப்போது பார்த்தாலும் போதைப்பொருள் மற்றும் பாதாளகுழு கதைகளையே கூறுகின்றனர்.  இவர்கள் சர்வதேச தலைவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்  வேண்டும்.

போலியான வாக்குறுதிகளை வழங்கியே   அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. மக்களின் அடிப்படை பற்றி பேசும் போது ஆளும் தரப்பின் உறுப்பினர்கள்  சிரிக்கிறார்கள். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இவர்களுக்கு அரசியல் பிரவேசத்துக்கான ஆயுதமாகவே காணப்பட்டது. ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செல்ல  முடியாத  காணப்படுகிறது .அந்தளவுக்கு  மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ  நாட்டை விட்டு தப்பிச்...

2026-09-16 17:44:55
news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32