இன்றைய திகதியில் எம்மில் இருபத்தி ஐந்து சதவீதத்தினருக்கும் மேல் வெரிகோஸ் வெய்ன் எனப்படும் கால் நரம்பு வீக்க பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையானவர்களுக்கு கால் நரம்பு வீக்கம் என்பது தெரிய வருகிறது. ஆனால் இதில் பலருக்கு இந்த பாதிப்பு தோலில் தெரியாத வகையில் மறைமுகமாக இருக்கக்கூடும் என வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கான சிகிச்சையை முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
வெரிக்கோசிஸ் வெயின் எனும் பாதிப்பு தோலில் அறிகுறியை வெளிப்படுத்தாமல், தோலின் அடிப்பகுதியில் மறைமுகமாக இருக்கக்கூடும். காலில் உள்ள தூய்மைப்படுத்தப்படாத குருதியை கால்பகுதியில் இருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்வது தான் கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளின் முதன்மையான பணியாகும். இத்தகைய நரம்பு எம்முடைய கால் பகுதியில் மூன்று அடுக்குகளில் அமையப் பெற்றிருக்கிறது. இந்த மூன்று அடுக்குகளில் ஏதேனும் ஒன்றில் ரத்தம் உறைந்தாலோ அல்லது தேக்கமடைந்தாலோ அது பாதிப்பை உண்டாக்கும்.
இதன் காரணமாக பலரும் காலில் ஏற்படும் அரிப்பு, வீக்கம், மதமதப்பு , ரத்த உறைவு, புண் ஆகியவற்றை துல்லியமாக அவதானிக்காமல் வேறொரு பாதிப்புடன் ஒப்பிட்டு அதற்கான சிகிச்சையை பெறுகிறோம். இவர்களில் பலருக்கு இரவு நேரங்களில் கால் வலியும், கால் தசை பகுதியில் அசௌகரியமும் ஏற்படக்கூடும். சிலருக்கு இப்பகுதியில் தொற்று பாதிப்பு அடிக்கடி ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பை தான் மருத்துவ மொழியில் ஹிட்டன் வெரிகோஸ் வெய்ன் என குறிப்பிடுகிறார்கள்.
சிலருக்கு இதன் காரணமாக தோலின் அடிப்பகுதியில் நிற மாற்றம் ஏற்படக்கூடும். சிலருக்கு தொற்றின் காரணமாக ஆறாத புண் ஏற்படக்கூடும். இவர்கள் ரத்தநாள சிகிச்சை நிபுணரை அணுகி தங்களுடைய கால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்பது குறித்த பரிசோதனையும், ஆலோசனையையும், அதற்குரிய சிகிச்சையும் பெற வேண்டும்.குறிப்பாக வயதானவர்களும் உடற் பருமன் கொண்டவர்களும் இத்தகைய பரிசோதனையை வைத்தியர்களின் அறிவுரைப்படி மேற்கொள்வது சிறந்தது.
இதற்காக வைத்தியர்கள் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் எளிய நிவாரண சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
வைத்தியர் பாலகுமார்
தொகுப்பு அனுஷா.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM