கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கும் முயற்சியானது  சர்வதேசத்தில் மீண்டும் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் நெருக்கடிகளை தோற்றுவிக்கும். காணாமல் போனவர்கள் தொடர்பில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 

நல்லிணக்க ஆணைக்குழு உட்பட பல்வேறு ஆணைக்குழுக்களில் கடந்த போர் சூழலில் தமது பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள் , யாரிடம் ஒப்படைத்தோம் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆகவே இவர்களுக்கும் மரண சான்றிழல் வழங்கப்பட்டால் அது மீண்டும் மனித உரிமைகளை மையப்படுத்திய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறுகையில்,

இலங்கையின் உள்நாட்டு போரின் போது வடக்கு கிழக்கில் மாத்திரம் அல்லாது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பலர் காணாமல் போயிருந்தனர். ஆனால் வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நெருக்கடியான சூழலே அரசாங்கத்திற்கு காணப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி அன்றிலிருந்தே இந்த பிரச்சணைக்கு தீர்வை பெற்று கொடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. கடந்த அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக இன்னோரன்ன காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தது. 

இதனால் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் காணாமல் போனவர்களின் பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் அவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க உள்ளதாக கூறுகின்றது. இது அத்தியாவசியமான ஒரு விடயமாகும். ஏனெனில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் கண்ணீர்விட்டு கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது தொடர்பில் முழுமையானதும் ஆழமானதுமான விசாரணைகளின் பின்னர் நட்ட ஈடு வழங்குதல் அவசியமாகும்.  

.

அத்தோடு கைது செய்த பின்னர் காணாமலாக்கப்பட்டிருப்பார்களாயின் அது நெருக்கடியான சூழலை தோற்றுவிக்க கூடும். ஏனெனில் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட பல்வேறு ஆணைக்குழுக்களில் கடந்த போர் சூழலில் தமது பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள் , யாரிடம் ஒப்படைத்தோம் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆகவே இவர்களுக்கும் மரண சான்றிழல் வழங்கப்பட்டால் அது மீண்டும் மனித உரிமைகளை மையப்படுத்திய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என கூறினார்.