ஆனந்த சமரக்கோன் அரங்கில் நாளை பொதுக்கூட்டம்: மிரிஹானை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்!

Published By: Digital Desk 1

20 Nov, 2025 | 03:06 PM
image

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நாளை வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை பிற்பகல் 2.00 மணி முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை, நுகேகொடை மேம்பாலம் அருகே உள்ள ஹைலெவல் சந்திப்பிலிருந்து நாவல சுற்றுவட்டம் (ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கிற்கு எதிரே உள்ள வீதி) வரை நாவல வீதியூடான வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில், வீதிகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்கமைய, பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள்

கொழும்பு மற்றும் கொஹூவலயிலிருந்து, நுகேகொட வழியாக நாவல மற்றும் புறக்கோட்டை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கம்சபா சந்தியிலிருந்து இடதுபுறம் திரும்பி, ஹைலெவல் வீதியில் கட்டிய சந்தி வழியாக மிரிஹான மற்றும் நாவல நோக்கிச் செல்லமுடியும்.

புறக்கோட்டை மற்றும் நாவலயிலிருந்து நுகேகொட வழியாக ஹைலெவல் வீதி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் நாவல சுற்றுவட்டத்திலிருந்து கம்சபா சந்தி வரையும், தெல்கந்த சந்தியிலிருந்து ஹைலெவல் வீதி வரையும் பயணிக்க முடியும்.

மஹரகமவிலிருந்து ஹைலெவல் வீதியில் நுகேகொட நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கம்சபா சந்தியிலிருந்து கட்டிய சந்தி வழியாக தெற்கு நோக்கி பயணிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20