ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19) இரவு உயிரிழந்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.
இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் இரவு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் வைத்திசாலையில் பார்வையிட்டு வந்த நிலையில் இத்துயரச் செய்தி இரவு வந்தது.
தந்தையார் சிறையில் வாடுகின்ற நிலையில், பேத்தியும் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் சிறுவர்களாக இருக்கும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM