அவுஸ்திரேலியாவில் இளம் வயதினரின் கணக்குகளை முடக்கும் இன்ஸ்டாகிராம்

Published By: Digital Desk 3

20 Nov, 2025 | 11:18 AM
image

அவுஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள 16 வயதுக்குட்பட்டோருக்கான முக்கிய சமூக ஊடகத் தடைக்கு முன்னர் இளம் வயதினரின்  இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகள் முடக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 13 முதல் 15 வயதுடைய பயனர்களின் கணக்குகளை மெட்டா நிறுவனம்  செயலிழக்கச் செய்ய உள்ளது. இது தொடர்பாக மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி செயலி ஊடாக எச்சரிக்கை அறிவுறுத்தல் அனுப்பப்படவுள்ளது. 

அத்துடன்,  இளம் வயதினர் தங்கள் கணக்குகள் முடக்கப்படுவதற்கு முன்னர் தங்கள் பதிவுகள், வீடியோக்கள் மற்றும் செய்திகளைப் பதிவிறக்கம் செய்து சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் "உலக அளவில் முன்னணி" என வர்ணித்துள்ளார். "குழந்தைகளை குழந்தைகளாக மாற்றுவதை" நோக்கமாகக் கொண்டது,டிக்டொக், யூடியூப், எக்ஸ், ரேடிட் மற்றும் ஸ்னாப்செட் போன்ற தளங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது. தடையை மீறும் நிறுவனங்களுக்கு 50 மில்லியன்  அவுஸ்திரேலிய டொலர் தண்டப்பணம் விதிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

13 முதல் 15 வயதுக்குட்பட்ட வயது பிரிவில் பேஸ்புக்கை 150,000 பேரும், இன்ஸ்டாகிராமை 350,000  பேரும் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் மின்-பாதுகாப்பு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வீடியோ செல்ஃபி, அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை (ID), அல்லது வயது சரிபார்ப்பு சான்றிதழ் திட்டம் ஊடாக பரிசோதிக்கப்பட்ட ஏனைய  அங்கீகரிக்கப்பட்ட முறைகள்  வழியாக தங்கள் வயதை உறுதிப்படுத்திக் காட்டலாம் என  மெட்டா தெரிவித்துள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடக செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கு பெற்றோரின் அனுமதி தேவைப்படும் ஒரு அமைப்பைப் பரிசீலிக்குமாறு சட்டமியற்றுபவர்களை மெட்டா வலியுறுத்தியுள்ளது. மேலும் "இளம் வயதினர் சமயோசிதமானவர்கள் மற்றும் வயது சோதனைகளைத் தவிர்க்க முயற்சிக்கலாம்" என எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்த தடையை தவிர்க்க கேமிங் தளமான ரோப்லாக்ஸ் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. 16 வயதுக்குட்பட்டவர்கள் வயது வந்த தெரியாத நபர்களுடன் அரட்டை அடிப்பதைத் தடை  விதித்துள்ளதோடு  டிசம்பர் மாதம் முதல் அரட்டை அம்சங்களுக்கான கட்டாய வயது சரிபார்த்தலை அறிமுகப்படுத்தியது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்கள், டிக்டொக், எக்ஸ்,ரெடிட், ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் கிக் ஆகியவை தடையால் பாதிக்கப்பட்ட தளங்கள் ஆகும்.

டிஸ்கார்ட், வட்ஸ்அப், மெசஞ்சர், ரோப்லாக்ஸ், ஸ்டீம், யூடியூப் கிட்ஸ், கூகிள் கிளாஸ்ரூம் ஆகியவை இந்த தடை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39
news-image

வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’...

2026-03-23 13:07:10
news-image

வட்ஸ்அப்பில் புதிய அப்டேட் : இனி...

2026-03-21 12:13:03
news-image

ஊகங்களைத் தாண்டி தரவுகளால் வெற்றியை கட்டியெழுப்பும்...

2026-02-05 12:33:10
news-image

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட...

2026-01-07 13:43:05
news-image

அவுஸ்திரேலியாவில் இளம் வயதினரின் கணக்குகளை முடக்கும்...

2025-11-20 11:18:06