உடனடியாக நடைமுறைக்கு வரும்படி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

சேவை அவசியம் கருதி பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

ரத்தொலுகம, அனூராதபுர, வெல்வெடிதுரை, பனாமுரே, சிலாபம், கம்பஹா, வவுனியா போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.