வைத்தியசாலைகளில் அமைய பெற்றிருக்கும் அதீத சார்பு சிகிச்சை பிரிவைப்பற்றி தெரியுமா..?

19 Nov, 2025 | 02:50 PM
image

இன்றைய சூழலில் சுகாதார துறையில் ஏராளமான நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு முழுமையான நிவாரண சிகிச்சையை வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் சாதாரண சிகிச்சை பிரிவு என இரண்டு பிரிவுகள்- நோயாளிகளை துல்லியமாக அவதானிக்கும் சிகிச்சை பிரிவுகள் கடந்த தசாப்தங்களில் இயங்கி வந்தது. சில வைத்தியசாலைகளில் இது தற்போதும் நடைமுறையில் உள்ளது.

ஆனால் சில தனியார் வைத்திய சாலைகளில் அதீத சார்பு சிகிச்சை பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு நிவாரண மற்றும் கண்காணிப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

விபத்தில் எதிர்பாராத விதமாக சிக்கும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிர்காக்கும் சிகிச்சை உடனடியாக வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு ஏதேனும் உறுப்பு இழப்பின் காரணமாக பாரிய அளவிலான நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருந்தால் அத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள். ஆனால் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகளை வழங்கி வரும் தருணத்தில் அவர்களின் உடல்நிலை முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். ஆனால் அவர்களை சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்ற இயலாது.

இதுபோன்ற நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் பிரிவாக தான் அதீத சார்பு பிரிவு  ( High Dependency Unit) எனும் சிகிச்சை பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்த பிரிவு சத்திர சிகிச்சைக்கு பிறகான உடல்நிலை முன்னேற்றத்திற்கு தாதியரின் கவனிப்பு குறைவாக தேவைப்படும் நோயாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக சத்திர சிகிச்சை பிரிவில் உறுப்பை இழந்தவர்கள் அதற்கான ஆதரவு சிகிச்சையை இத்தகைய பிரிவில் இருந்து பெறலாம். தீவிர சிகிச்சை பிரிவு போல் அன்றி இங்கு இரண்டு நோயாளிகளுக்கு ஒரு தாதியர் என்ற வீதத்தில் மருத்துவம் சார்ந்த பராமரிப்பு இருக்கும். இதில் நோயாளிகள் முழுமையான குணமடைந்த பிறகு அவர்கள் சாதாரண பிரிவிற்கு மாற்றி பராமரிப்பு சிகிச்சையை பெறலாம்.

தீவிர சிகிச்சை பிரிவிற்கும் , சாதாரண சிகிச்சை பிரிவிற்கும் இடையே உள்ள இந்த அதீத சார்பு சிகிச்சை பிரிவிற்கு நோயாளிகளின் ஆதரவு முழுமையாக கிடைத்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

வைத்தியர் கலாவதி
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13
news-image

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-30 17:14:50
news-image

மேல் தோல் பகுதியில் உள்ள மரபணுகளின்...

2026-07-29 17:03:14
news-image

கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-07-28 17:21:34