இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ராகுல் தொடர்ச்சியாக 7 முறை அரைச்சதம் கடந்து குமார் சங்கக்கார, அன்டி பிளவர் ஆகியோரின் சாதனையை சமன்செய்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக பல்லேகலயில் இடம்பெற்றுவரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அரைச்சதம் கடந்ததன் மூலம் இந்த சாதனையை சமன்செய்தார்.

இப் போட்டியில் தவானுடன் ஆரம்பத்துடுப்பாட்டவீரராக களமிறங்கிய ராகுல் 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இன்றையபோட்டியில் அரைச்சதம் கடந்த ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தனது 9 ஆவது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அதேவேளை, அவர்  தொடர்ச்சியான 7 ஆவது அரைச் சதத்தை பூர்த்திசெய்து, தொடர்ச்சியாக அதிக அரை சதங்களை கடந்தவர்கள் வரிசையில் ஏனைய வீரர்களுடன் சாதனையை சமன் செய்தார்.

இதேவேளை, கிரிக்கெட் ஜாம்பவான்களான இலங்கை அணியின் குமார் சங்கக்கார, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் எவர்ட்டன் வீக்ஸ், சிவ்நரைன் சந்தர்போல், அவுஸ்திரேலிய அணியின் கிறிஸ் ரொஜர்ஸ் மற்றும் சிம்பாப்வே அணியின் அன்டி பிளவர் ஆகியோர்  தொடர்ச்சியாக 7 அரை சதங்களை கடந்தமையே சாதனையாக இருந்து வருகின்றது.

 இந்நிலையில் இலங்கைக்கு எதிரான இன்றை போட்டியில் 85 ஓட்டங்களைப்பெற்றதன் மூலம் ராகுலும் 7 அரைச்சதங்களைப்பெற்றவர்கள் வரிசையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.