2025 ஆம் ஆண்டின் சிறந்த சொல் 

Published By: Digital Desk 3

19 Nov, 2025 | 12:15 PM
image

2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லாக "பாராசோஷியல்" (parasocial) என்பதை கேம்பிரிட்ஜ் அகராதி அறிவித்துள்ளது.

இந்த சொல் ஒரு நபருக்கும் அவர்கள் அறியாத பிரபலமான ஒரு நபருக்கும் இடையேயான உணர்வுபூர்வமான தொடர்பை குறிக்கிறது என வரையறுக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பொப் நட்சத்திரம் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அமெரிக்க கால்பந்து வீரர் டிராவிஸ் கேல்ஸ் ஆகியோர் தங்களின் நிச்சயதார்த்தத்தை அறிவித்தபோது, அவர்களை நேரில் சந்திக்காத பல ரசிகர்களும் அவர்களுடன் வலுவான உணர்வுபூர்வமான தொடர்பை உணர்ந்தனர். 

ஒன்லைன் இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரவாளர்களுடன் மக்கள் உருவாக்கும் பாராசோஷியல் பிணைப்புகளும் வேகமாக அதிகரித்து வரும் இந்த புதிய போக்கின் முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

“2025ம் ஆண்டின் சிந்தனைகளையும் காலநிலையையும் பிரதிபலிப்பதாலேயே ‘பாராசோஷியல்’ சிறந்த தேர்வாகிறது. ஒருகாலத்தில் கல்வியியல் துறைக்குச் சொந்தமான இந்த சொல் இன்று பொதுவாழ்க்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.”  “இலட்சக்கணக்கானோர் பாராசோஷியல் உறவுகளில் ஈடுபட்டுள்ளனர்; மேலும் பலர் அதன் உயர்வை ஆர்வத்துடன் கவனிக்கின்றனர்.” அகராதி இணையதளத்தில் ‘parasocial’ என்ற சொல்லுக்கான தேடல்கள் அதிகரித்துள்ளது என கேம்பிரிட்ஜ் அகராதியின் கொலின் மெக்இன்டாஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சொல் 1956ஆம் ஆண்டு பிரபலமடைந்தது.அப்போது சிக்காகோ பல்கலைக்கழக சமூகவியலாளர்கள், தொலைக்காட்சி பார்வையாளர்கள் திரையில் தோன்றும் நபர்களுடன், குடும்பம் அல்லது நண்பர்கள் போல ஒருதரப்பு பிணைப்புகளை உருவாக்குவதாக கவனித்தனர்.

“பாராசோஷியல்” என்பது ஆண்டின் மிகச் சிறந்த தெரிவு”.“இன்று பலர் இன்ஃப்ளூயன்சர்களுடன் ஆரோக்கியமற்ற, தீவிரமான பாராசோஷியல் தொடர்புகளை உருவாக்குகின்றனர். இது அவர்கள் அந்த நபரை ‘அறிந்தவர்கள்’ போல உணரச்செய்து, நம்பிக்கை, விசுவாசம் போன்றவற்றையும் தூண்டும். ஆனால் இவை அனைத்தும் ஒருதரப்பை சார்ந்தது” என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் பேராசிரியர் சிமோன் ஷ்னால் எச்சரித்துள்ளார்.

“பிரபலங்களின் உள்ளடக்கத்தை பல மணிநேரம் பார்ப்பதன் மூலம், அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் என்ற தவறான நம்பிக்கை உருவாகிறது. அதே சமயம், டெய்லர் ஸ்விஃப்ட் போன்ற திறமையான நட்சத்திரங்களுடன் உருவாகும் பாராசோஷியல் ரசிகத்தன்மை ஆரோக்கியமானதாக இருந்தாலும், அது சில சமயம் மிகுதியான பாடல் விளக்கங்கள் மற்றும் தீவிரமான ஒன்லைன் விவாதங்களுக்கு வழிவகுக்கலாம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவாளர்கள் போன்ற ஏஐ கருவிகளுடன் பலர் ‘நண்பர்கள்’ போல பேசுவது, ஊக்கம் பெறுவது அல்லது சிகிச்சை மாற்றாகப் பயன்படுத்துவது போன்ற புதிய பாராசோஷியல் போக்குகளும் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது உண்மையான உறவு அல்ல; இளையோர் இதற்கு அதிகமாக ஈர்க்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு கேம்பிரிட்ஜ் அகராதி “delulu”, “skibidi”, “tradwife” போன்ற 6,000க்கும் மேற்பட்ட புதிய சொற்களைச் சேர்த்துள்ளது. அதேபோல், ஏஐ உருவாக்கிய தரமற்ற ஒன்லைன் உள்ளடக்கத்தை குறிக்கும் “slop” மற்றும் ஏதாவது ஒன்றை மீமாக மாற்றுவதை குறிக்கும் “memeify” போன்ற சொற்களும் இந்த ஆண்டில் முக்கியத்துவம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்