யாழ்.நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவினை முன்னிட்டும்  இந்திய சுதந்திர தின 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும்  இந்தியத் துணைத்தூதரகமும் யாழ்.மாநகர சபையும் இணைந்து நடாத்தும் புத்தகத் திருவிழா வை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

இந்த புத்தகத் திருவிழா நல்லூரிலுள்ள யாழ்.மாநகர சபை சுகாதாரப் பணிமனையில் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வட மாகாண மகளீர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்குக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்கள், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இந்த புதகத் திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இடம்பெறவுள்ளது.