வியட்நாமில் மண்சரிவு - பஸ் மீது பாறைகள் விழுந்ததில் 6 பேர் பலி ; 19 பேர் படுகாயம் 

18 Nov, 2025 | 03:48 PM
image

வியட்நாமில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவின்போது பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ் மீது பாறைகள் வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததோடு 19 பேர் படுகாயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வேளையில் வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து கான் லே மாகாணத்தில் கணவாயருகில் 32 பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மண்சரிவில், பஸ் மீது  பாறைகள் விழுந்துள்ளன. 

பாறைகள் விழுந்ததில் பஸ்ஸின் முன்பகுதி நசுங்கி பலத்த சேதமடைந்துள்ளது. 

மழை தொடர்ந்து பெய்ததால் கணவாயின் இருபுறமும் மண்சரிவுகள் ஏற்பட்டதோடு, அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டது. 

இதனால் பல மணிநேரம் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றடைய முடியாமல் இருந்துள்ளனர். 

இந்நிலையில், நள்ளிரவுக்குப் பின்னரே மீட்புப் பணியினர் குறித்த பகுதிக்கு சென்று மண்சரிவில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அத்தோடு, உயிரிழந்தவர்களின் உடல்களையும் கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43
news-image

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள்...

2026-09-06 18:41:17
news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 19:21:41
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08