புதிய கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. நாம் இணைந்த எதிர்கட்சியாகவே செயற்படுவோம் எனத் தெரிவித்த வாசுதேவ நாணயகார எம்.பி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னம் கிடைக்காவிட்டால் அச்சின்னத்தை தடை செய்ய நீதிமன்றம் செல்வோம் என்றும்   குறிப்பிட்டார். 

இது தொடர்பில் வாசுதேவ நாணயகார எம்.பி மேலும் கூறுகையில்,

இணைந்த எதிர்கட்சியாகவே எமது அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எம்மோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்துக் கொண்டே இப் பயணம் தொடரும். ஆனால் புதிய கட்சி் ஆரம்பிக்கும் எண்ணம் எமக்கில்லை. விமல் வீரவன்ச புதிய கட்சி ஆரம்பிக்கின்றாரா? இல்லையா? தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இணைந்த எதிர்f;கட்சியாக வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடுவோம். அச் சின்னம் எமக்கு கிடைக்காவிட்டால். அச் சின்னத்தை தடைசெய்வதற்காக நீதிமன்றம் செல்வோம். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரையும் சந்தித்து தெ ளிவுபடுத்துவோம் என்றார்.