உலகில் மிகவும் பிர­ப­ல­மா­னதும் அதி­க­மா­னோரால் விளை­யா­டப்­ப­டு­வ­து­மான விளை­யாட்­டாக திகழ்­வது கால்­பந்­தாட்­டம்தான்.

இலங்­கை­யிலும் கிரிக்­கெட்டை அடுத்து அதி­க­மா­னோரால் விளை­யா­டப்­படும் விளை­யாட்டு என்றால் அது கால்­பந்­தாட்­டம்தான்.

இப்­ப­டி­யி­ருக்க இலங்­கையில் கால்­பந்­தாட்ட தேசிய அணி­யொன்று இல்லை என்­பது பெரும் சோகம்.

அண்­மையில் பயிற்­சி­ய­ாளர்­க­ளாக செயற்­பட்டு வந்த மூன்­றுபேர் கொண்ட குழு­வையும் கலைத்­து­விட்­டது இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம்.

அதற்கு சொன்ன காரணம் எதிர்­வரும் காலங்­களில் இலங்­கைக்கு சர்­வ­தேச போட்­டிகள் இல்லை அதனால் பயிற்­சி­யா­ளர்­களை நீக்­கு­கிறோம் என்று.

இந்த முறை சரி­தானா? தேசிய அணி­யொன்று இல்­லாமல் ஒரு விளை­யாட்டை ஊக்­கு­விக்க முடி­யுமா?

உலக கால்­பந்­தாட்ட தர­வ­ரிசைப் படி பார்த்தால் இலங்கை அணி 197 ஆவது இடத்தில் இருக்­கி­றது. இதில் கடந்த காலங்­களில் முன்­னேற்றம் கண்­டுள்­ளதா என்றுப் பார்த்­தாலும் இல்லை. பின்­தங்­கித்தான் வரு­கி­றது.

இலங்கைக் கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் புதிய நிர்­வாக சபை பொறுப்­பேற்று ஓரிரு மாதங்கள்தான் ஆகின்­றது. அதனால் ஒட்­டு­மொத்­த­மாக புதிய நிர்­வாக சபைக்கும் இந்த குற்­றச்­சாட்டை முன்­வைக்க முடி­யாது.

ஆனாலும் கடந்த முறை தலை­வ­ராக இருந்த அனுர டி சில்­வாதான் இம்­மு­றையும் புதிய தலை­வ­ராக தேர்­வு­செய்­யப்­பட்­டுள்ளார். அதனால் தேசிய அணி ஒன்று இல்­லா­த­மைக்­கான கார­ணத்தை அவ­ரிடம் கேட்­கலாம்.

இத்­த­னைக்கும் 1995ஆம் ஆண்டு தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட தொடரில் இலங்கை சம்­பியன் பட்டம் வென்ற அணியின் முக்­கி­ய­மான வீர­ராக திகழ்ந்­த­வர்தான் தற்­போ­தைய இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தலை­வ­ரா­கவும் செயற்­ப­டு­கிறார்.

எதிர்­கா­லத்தில் இலங்­கைக்கு சர்­வ­தேச போட்­டிகள் இல்­லாத கார­ணத்­தினால் பயிற்­சி­யா­ளர்கள் குழுவை கலைத்­து­விட்டோம் என்று சொன்­னா­லும்­கூட தேசிய அணி­யொன்று இல்­லா­ம­லாக்­கப்­பட முடியுமா?

ஒவ்வொரு வீரருடைய உச்சபட்ச இலட்சியமே தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான். இப்படியிருக்கையில் இலங்கையில் கால்பந் தாட்ட தேசிய அணி யொன்றை பேணாமல் விடுவது சரியா என்பது தான் எமது கேள்வியாக அமைகின்றது.