சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகள் – அமைச்சரவை அங்கீகாரம்

18 Nov, 2025 | 03:28 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

பொதுமக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுநோயால் 2021 – 2024 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சுகாதார சேவை கருத்திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

பொருளாதாரத்தின் அண்மைக்கால வளர்ச்சியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், பொதுமக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய கருத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் கோரல்களுக்கமைய, அரச முதலீட்டு வேலைத்திட்டங்களில் உட்சேர்க்கப்பட்டுள்ள சுகாதாரத் துறையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்திட்டங்கள் மற்றும் புதிய தொடக்க முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி அரச முதலீட்டுக் குழு சுகாதாரத் துறையில் புதிய கருத்திட்டங்கள் பலவற்றை முதலீட்டு வேலைத்திட்டங்களில் உட்சேர்ப்பதற்குத் தேர்ந்தெடுத்துள்ளது. 

அதற்கமைய, குறித்த கருத்திட்டங்களில் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டின் மூலம் நிதியொதுக்கீடு செய்யப்படும் கீழ்க்காணும் 09 புதிய கருத்திட்டங்களை அடுத்த ஆண்டில் அமுல்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

தேசிய வாய்ச்சுகாதார மதிப்பீடு – 2025/ 2026

உத்தேச சத்திரசிகிச்சை, இழையொளி அகநோக்கு (Endoscopy) அலகு மற்றும் இதய – தோள்பட்டை முன் சத்திரசிகிச்சை நோயாளர் விடுதியை நிர்மாணிப்பதற்காக குருநாகல் போதனா மருத்துவமனையிலுள்ள நான்கு மாடிக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல்

மாத்தளை மாவட்ட மருத்துவமனையின் சத்திரசிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் வசதிகளுடன் கூடிய மகப்பேற்று அலகுக்கான ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தல்

மஹரகம வாய்ச்சுகாதார  சேவைகள் நிறுவனத்திற்கான வெளிநோயாளர் பிரிவு மற்றும் விசேட அலகுடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தல்

தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சியல் தொடர்பான நிறுவனத்தின் ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தல் (கொழும்பு சட்ட மருத்துவ அலுவலகத்திற்கான) 

அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் திடீர் விபத்து, அவசர சிகிச்சை தொடர்பான சேவைகளுக்கான கட்டிடத்தொகுதி கட்டம் - I மற்றும் கட்டம் - II இனை நிர்மாணித்தல்

அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதிகளை நிர்மாணித்தல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கதிர் இயக்கவியல் அலகை விரிவுபடுத்தல்

இலங்கை தேசிய மருத்துவமனையின் தேசிய இதய நிலையத்தை நிர்மாணித்தல்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 நாட்களில் 135 வீதி விபத்துக்கள்...

2026-01-24 04:32:31
news-image

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எப்போதும் விமர்சிப்பேன்...

2026-01-24 04:31:10
news-image

சட்டமா அதிபரின் சுயாதீனத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த...

2026-01-24 04:29:10
news-image

ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள் -...

2026-01-24 04:19:18
news-image

யாழில். வீட்டு கழிவு நீரை வெள்ள...

2026-01-24 03:59:46
news-image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள்...

2026-01-24 03:49:09
news-image

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்...

2026-01-24 03:44:52
news-image

கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக...

2026-01-24 03:40:49
news-image

மட்டக்களப்பு கிரான் பகுதியில் மகாவலி காணிகள்...

2026-01-24 03:33:47
news-image

முக்கிய துறைகள் அரசியலாக்கம்: கல்வி மறுசீரமைப்பில்...

2026-01-23 15:34:11
news-image

மலையக பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள்...

2026-01-23 16:05:35
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும்...

2026-01-23 16:49:20