50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் ; அரசின் வாக்குறுதி மீறல் குறித்து சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

18 Nov, 2025 | 10:00 AM
image

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை கைவிடும் நிலைக்கு வந்துள்ளது.

பிரதமர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, நாட்டில் தற்போது சுமார் 50,000 பட்டதாரி தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆகவே,  இவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தமக்கு தொழில் பெற்றுத் தருமாறு கோரி அமைதி வழியிலான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 35,000 தொழில் வாய்ப்புகளை எவ்வாறு பெற்றுத் தருவோம்  என்பதை விரிவாக விளக்கியிருந்தது. ஆனால் இன்று அவை அனைத்தையும் மறந்துவிட்டு செயற்பட்டு வருகிறது.

இவ்வாறு இந்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நிரந்தரமாக உள்ளீர்த்துக் கொள்ளாமல் இருப்பது நியாயமற்ற செயலாகும் என்பதால், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல சந்தர்ப்பங்களில் நான் இது தொடர்பில் பேசி இருக்கிறேன். இவர்களின் உரிமைகளுக்காக தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24
news-image

பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதித் தலைமைப் பதவியை...

2026-09-09 16:28:09
news-image

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன்...

2026-09-09 17:44:22
news-image

பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை...

2026-09-09 16:28:56
news-image

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு 15...

2026-09-09 17:38:30
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடனான அர்ப்பணிப்பு...

2026-09-09 19:45:08
news-image

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள்...

2026-09-09 16:30:03
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56
news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54