வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வாளுடன் நின்ற ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Related image

குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவுடன் தொடர்பானவரா என்ற அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று  மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தேக்கவத்தை 12 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் க.கனிஸ்டன் என்ற இரும்பு வேலை செய்யும் 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது வீட்டில் இருந்து வில்லுத்தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 21.5 அங்குளமுடைய வாளொன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வந்து தொழில் புரிந்து வந்த நிலையில், ஆவா குழுவுடன் தொடர்பு கொண்டவரா என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று  வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்ற நிலையில் ஒரு மாணவனுக்கு சிறிய ரக கத்தியால் மற்றைய மாணவன்வெட்டியதில் காயமடைந்த மாணவன் ஒருவன் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.