ஜெனிவா மனித உரிமை பேரவையை நாங்கள் பேய் என்றோ கடவுள் என்றோ தெரிவிப்பதில்லை - விஜித்த ஹேரத்

17 Nov, 2025 | 03:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அமெரிக்க ஜனாதிபதியின் விசேட வரியை நூற்றுக்கு 40 வீதத்தில் இருந்து நூற்றுக்கு 20வீதம் வரை குறைத்துக்கொள்ள எமக்கு முடியுமாகி இருக்கிறது. என்றாலும் இதுதொடர்பான உடன்படிக்கை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் ஜெனிவா மனித உரிமை பேரவையின்போது, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக நாங்கள் நடுநிலையாக செயற்பட்டிருக்கிறோம். ஜெனிவா மனித உரிமை பேரவையை நாங்கள் பேய் என்றோ கடவுள் என்றோ தெரிவிப்பதில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைசசு மற்றும் நீதி மற்றம் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

அரசாங்கத்தின் கடந்த ஒருவருட காலத்தில் உலகில் அனைத்து நாடுகளுடனும் எமது இராஜதந்திர நடவடிக்கைகளை பலப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

எமது நற்புறவு, இராஜதந்திர நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் வெளிநாட்டு அரச தலைவர்கள் 20பேர்வரை எமது நாட்டுக்கு வந்துள்ளனர்.

அது மாத்திரமின்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர்  9 வருடங்களுக்கு பின்னர் எமது நாட்டுக்கு வந்திருந்தார். அதன் மூலம் எமது நாட்டின் மனித உரிமை, ஜனநாயகத்தை நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம். 

அதேபோன்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையில் எங்களுடன் உத்துழைப்புடன் செயற்பட்டு  வருகின்றன.

அதனை உறுத்திப்படுத்தும் வகையில் உலக வங்கியின் தலைவர் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்தார். இதன் மூலம் எமது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உலக வங்கி ஊடாக மேற்கொள்ள உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேநேரம் எமது ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு  8 உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொண்டுள்ளதுடன் பிரதமர் 6 உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன் மூலம் எமது தொடர்புகளை சர்வதேச நாடுகளுடன் பலப்படுத்திக்கொள்ளவும் அந்த நாடுகளின் வியாபாரிகளுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் முதலீட்டார்களை நாட்டுக்கு அழைத்துவரவும் தேவையான கலந்துரையாடல்களை மேற்கொள்ள  முடியுமாகி இருக்கிறது.

அதேபோன்று எமது நாடு ஒருசில நாடுகளுடன் நீண்டகாலமாக பொருளாதார, அரசியல் தொடர்புகளை பேணாமல் வந்துள்னன. அதனால் நாங்கள் ஒருவருட காலத்துக்குள் பூட்டான்,பங்களாதேஷ், நெதர்லாந்து, இத்தாலி ஜப்பான், பிலிப்பீன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளுடன் அரசியல், பொருளாதார கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த  நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளோம். அரசாங்கத்தின் ஒரு வருடகாலத்தில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில்  வெளிநாடுகளுடன் புதிதாக 70 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம்.இது அரசாங்கதின் பாரிய வெற்றியாகும்.

மேலும் 150 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியுமாகி இருக்கிறோம். அதேபோன்று எமது வியாபாரிகள் வெளிநாடுகளில் வியாபாரம் செய்ய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோன்று பல நாடுகளுடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் விசேட வரிவித்திப்பில் எமக்கு நூற்றுக்கு 40 வரி விதிக்கப்பட்டிருந்தது.அதனை நூற்றுக்கு 20 வீதம் வரை குறைத்துக்கொள்ள எங்களுக்கு முடியுமாகி இருந்தது.

அத்துடன் எமது சில உணவு பொருட்களுக்கு  பூச்சியம் வரி  நிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி ட்ரம் கடந்த 13ஆம் திகதி புதிய உத்தரவொன்றை விடுத்திருக்கிறார்.

எமது அந்த தொடர்புகள் மூலமே இந்த விடயங்களை அடைந்துகொள்ள முடியுமாகி இருக்கிறது. இந்தியாவுக்கு கூட இந்த விடயங்களை செய்துகொள்ள முடியாமல் போயிருக்கிறது.

என்றாலும் இது தொடர்பான கலந்துரையாடல் இன்னும் இடம்பெற்று வருகிறது. இன்னும் இதுதாடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.இது தொடர்பில் இதுவரை 17 தடவைகள்  பேச்சுவார்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.

அதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் ஜனாதிபதி கலந்துகொண்டு பலஸ்தீன் மக்களின் உரிமை தொடர்பில் எமது நாட்டின் நிலைப்பாட்டை  ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டடிருந்தார். ஜெனிவா மனித உரிமை பேரவையின்போது, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக நாங்கள் நடுநிலையாக செயற்பட்டிருக்கிறோம்.

ஜெனிவா மனித உரிமை பேரவையை நாங்கள் பேய் என்றோ கடவுள் என்றோ தெரிவிப்பதில்லை. அதனால் எமது நாடின் மனித உரிமையை பாதுகாப்பது தொடர்பில்  எமது நிலைப்பாட்டை தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறான பல  வெற்றிகளை இந்த குறிய காலத்தில் நாங்கள் அடைந்திருப்பதையிட்டு, நாடு என்றவகையில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51