இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான உறவுகள் ஆரம்பித்து அறுபது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிபுணர்களின் சந்திப்பு ஜனாதிபதி மைதிரி பால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான தொடர்புகள் ஆரம்பித்து 60 வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதியினால் பரிசில்களும் இந் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச நிஹால் ரொத்ரிகோ பர்னாட் குணதிலக மற்றும் சீனாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய பிரதானி ஷியேங் லியேங் உட்hட பலர் கலந்து கொண்டனர்.