நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 1

16 Nov, 2025 | 02:29 PM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று (15) இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்திவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹங்வெல்ல - ஊரபொல வீதியில் நிட்டம்புவவிலிருந்து ஹங்வெல்ல நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வாதுவ - வட தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிரிந்திவெல பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வெல்லவாய – எல்ல வீதியில், கார் ஒன்று, எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் எல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43
news-image

முல்லைத்தீவு மாத்தளன் சிறுகடலில் அதிர்ச்சி: இலட்சக்கணக்கான...

2026-09-07 14:46:14
news-image

தாய்லாந்து செல்ல வீசா இல்லா அனுமதி...

2026-09-07 14:37:13
news-image

யோஷித ராஜபக்‌ஷ தனது மேல்முறையீட்டை மீளப்...

2026-09-07 14:25:56