இந்தோனேசியாவின் மண்சரிவு ; 11 பேர் பலி, 12 பேர் மாயம் 

Published By: P. Saranya

16 Nov, 2025 | 12:06 PM
image

இந்தோனேசியாவின், மத்திய ஜாவாவில் கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் காணாமல் போன 12 பேரை தேடிவருகிறார்கள். 

கடந்த வியாழக்கிழமை  சிலாகாப் நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிபியூனிங் கிராமத்தில் பல வீடுகள்  மண்ணுக்குள் புதைந்துள்ளன.

 3 முதல் 8 மீட்டர் (10-25 அடி) ஆழத்தில் மக்கள் புதைந்திருந்ததால் மீட்புப் பணி சவாலானது மாறியுள்ளது.

நேற்று மூன்று பேரும் இன்று எட்டு பேருமாக 11 பேர் உயிரிழந்தனர். பன்னிரண்டு பேர் காணாமல்  போயுள்ளனர் என இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ  நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாட்டில் மழைக்காலம் செம்டெம்பர் மாதம்  ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதால்  வெள்ளப்பெருக்கு மற்றும் அதிகளவான மழை பெய்யும் வானிலை அவதானம் நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மத்திய ஜாவா நகரமான பெக்கலோங்கனில் பெய்த மழையால் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி சுமார்  25 பேர் உயிரிழந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான்...

2026-09-09 17:29:09
news-image

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட...

2026-09-09 14:34:06
news-image

“சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது...

2026-09-09 12:21:47
news-image

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு:...

2026-09-09 12:22:31
news-image

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 பேனாக்கள், மெழுகுவர்த்தி...

2026-09-09 11:59:59
news-image

ரஷ்ய மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு ;...

2026-09-09 11:14:26
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா...

2026-09-09 11:16:36
news-image

வழமைக்கு திரும்பியுள்ளது ஈபிள் கோபுரம்

2026-09-09 10:55:22
news-image

நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவு...

2026-09-09 14:21:18
news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50