தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தனது 62வது வயதில் காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட திடீர் சுகவீனத்தைத் தொடர்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழக்கும்போது இவருக்கு வயது 62, சிரேஷ்ட நிர்வாகஅதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
ஹரிச்சந்திர ஹொரணை ஸ்ரீ பாலி கல்லூரியில் இடைநிலைக் கல்வியை பயின்றார். அதன் பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
1991 ஆம் ஆண்டு, இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த அவர், ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்திற்கான உதவி மாவட்ட தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் காலியில் உதவி மாவட்ட தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.
பின்னர் அவர் காலி நான்கு கோரளை பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச செயலாளர் மற்றும் காலியின் மேலதிக மாவட்ட செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தார். மேலும் காலியின் பதில் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்.
ஹரிச்சந்திர இரத்தினபுரி மாவட்ட செயலாளராகவும் பின்னர் அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளராகவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டு நாயகமாகவும் பணியாற்றினார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM