மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது

16 Nov, 2025 | 10:33 AM
image

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்  கல்வி கற்கும் பாடசாலை மாணவியான  தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக இருக்கும்  14 வயது மதிக்கத்தக்க இம்மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸாருக்கு சனிக்கிழமை (15) மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கடல்தொழில் மேற்கொண்டுவருவதுடன், மாணவியின் தாயார் நெசவு தொழிலை மேற்கொண்டு வருபவராவார்.

கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய  பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின்  வழிகாட்டுதலில்  குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் மருதமுனை, பாண்டிருப்பு ,பெரிய நீலாவணை ,பகுதிகள் உள்ளடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்வெட்டு ஏற்படாது: அமைச்சர்...

2026-08-14 09:34:10
news-image

வத்தளை துப்பாக்கிச் சூடு ; இந்தியாவுக்குத்...

2026-08-14 09:28:27
news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:18:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 09:17:07
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13